செய்திகள்

டில்லி துவாரகா ராம் மந்திரில் சங்கர ஜெயந்தி

மே 08,2020 

இந்து மதம் தழைக்க பாரத  நாட்டில் அவதரித்த மஹான்கள் அநேகம் அவர்களுள்  ஆதி சங்கரர் மிக முக்கியமானவர்   கிமு ஏழாம் நூற்றாண்டில் இன்றைய கேரளாவில் காலடி எனுமிடத்தில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதியனருக்கு மகனாக பிறந்த சங்கரர் கௌட பாதரின் சீடரான கோவிந்த பகவத் பாதரிடம் வேதம், வேதாந்தம் ஆகியவற்றை கற்று தேர்ந்து ஆதி சங்கர பகவத்பாதர் என்ற பட்டத்தையும் பெற்றார்


சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், பூ ரி  என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்  இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.


இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றதுஎன்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.


மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம்,விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


இவரது  அவதார தினம் சங்கர ஜெயந்தி  சமீபத்தில் கொண்டாடப்பட்டது .தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில்  டில்லி துவாரகா ராம் மந்திர வளாகத்தில் பண்டிதர் சங்கரர் பதுமைக்கு  அபிஷேகம் அலங்காரம் பூஜைகளை செய்வித்தார்.


கோவில் நிர்வாகம் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டார் கள் 
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்...

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு...

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை...

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன்

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us