செய்திகள்

கடமையிலும் மானுடம்

மே 09,2020 

உலகறிந்த உண்மை கொரோனாவின் ஆளுமை.பரந்த இந்தியாவில் வாழும் நாம் ஒவ்வொருவரும் அதன் பிடியில் அகப்பட்டு பலவித கட்டுப்பாடு களுக்கிடையில் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம்.


எத்தனை இன்னல்கள். வணிக ரீதியாக தொழில்கள் முடங்கி வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்கள் ஒருபுறம்.


இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்க வேண்டிய பல திருமணங்கள்  தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.


மிக குறைந்த உறவுகளுடன் நடந்த திருமணங்கள்.இது தவிர பல சிறிய பெரிய சுப நிகழ்வுகள் நடத்த முடியாமல் போனதையும் நாம் கேட்டு வருகிறோம்.


அதில் ஒன்று தலைநகரில் நடக்க இருந்த ஜெயராமன் தம்பதியர் திருமண பொன் விழா.லயன்ஸ் கிளப்பில் இணைந்து பல உயரிய நலப்பணிகள் செய்து வரும் சமூக  ஆர்வலர்.



கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட சமூக திருமணங்களை தில்லியில் நடத்தியுள்ளார்.அனைவரும் வட இந்தியாவில் வாழும் கீழ்த்தட்டு மக்கள்.பிரபல சிமெண்ட் நிறுவனத்தின் ஆலோசகர்.கிழக்கு தில்லியில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர் பங்கு உயர்வானது.


இவரது திருமண நாள் விழா ஊரடங்கு உத்தரவினால் தடைப்பட்டது.அவரது நண்பர்கள் காவல் துறையை அணுகி வாழ்த்து தெரிவிக்க அனுமதி வேண்டினார்கள்.


கிழக்கு தில்லி காவல் அதிகாரிகள் கூடவே வந்து தம்பதியர் அடுக்கு வளாகத்தின் வாசலில் கேக் வெட்டி கொண்டாடியது பாராட்ட வேண்டிய தொன்று.


வளாக குடியிருப்பு நண்பர்கள் அவர்கள் வீட்டு பால்கனியில் நின்று கர ஒலி எழுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.


இந்த சந்தர்ப்ப சமூக இடைவெளியை கடைபிடித்து  தம்பதியரின் திருமண நாள் வாழ்த்து கூறி, அவர்கள் மகிழ்ச்சி


யை பன்மடங்கு அதிகரித்தது நெஞ்சை தொட்டது. ஊடகங்கள் தம்பதியரை நேர்காணல் கண்டு இந்த வித்யாசமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார்கள்.




- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்...

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு...

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை...

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன்

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us