செய்திகள்

தலைநகரில் மனித நேயம்

மே 09,2020 

உலகமே கண்ணுக்கு தெரியாத வைரஸ் என்ற கொரோனாவினால் பல வித இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை காத்து வருகிறது. இதெல்லாம் தினமும் நாளிதழ ஊடகங்கள் மூலம் நாம் பார்த்து வருகிறோம். இந்த இக்கட்டான நிலையில் தன்னலம் கருதாமல் மருத்துவர்கள்,காவல் துறை, துப்புரவு தொழிலாளர்கள் என பலரும் சமூகத்தில் பணியாற்றி வருவதையும் பார்க்கிறோம். இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் நிலம் புலர்ந்த தொழிலாளர்கள்.
இதெல்லாம் நம்மை ,நம் மனதை அலைகழிக்க . களம் இறங்கி சமூக சேவை புரியும் பல தன்னார்வலர்கள், அமைப்புக்கள் எங்கும் பார்க்கிறோம். நம்மால் முடிந்த பொருள் உதவியை அந்த அமைப்புக்கள் மூலம் பலரும் செய்கிறார்கள். நமது தமிழ் நாட்டில் திருநெல்வேலி யை சேர்ந்த அன்பர் ரவி அவர்கள் தலைநகரில் பணி முன்னிட்டு வந்த பலருள் ஒருவர். சமூக நற்பணிகள், கோவில் அறப்பணிகள் என் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்.இந்த ஊரடங்கு நிலையில் தன்னார்வத்துடன் முன்னின்று கடந்த 35 நாட்களாக உணவு பொட்டலங்கள் தயாரித்து தனது இரு சக்கர வாகனத்தில் பல பகுதிகளில் விநியோகம் செய்கிறார்.

அவருக்கு பக்க பலமாக சமையல் கலை அன்பர் சந்தோஷ் குமார்.மற்றும் பாண்டவர் குழு நண்பர்கள் பலரும் உடன் நிற்பது பாராட்டவேண்டிய உயர்ந்த பணி. அவருக்கு நன்கொடை அனுப்பி உதவ கீழ் வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
93543 03067
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்...

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு...

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை...

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன்

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us