செய்திகள்

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

ஆகஸ்ட் 23,2020 

   வேதிக் பிசார் சாஸ்தான் அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ விநாயகா–ஸ்ரீ கார்த்திகேயா ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.இந்த நன்னாளில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்தி சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியும் கிடைக்கப் பெற்றது பக்தர்களை கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


இரு கோயில்களிலும் அதிகாலையிலேயே வேத மந்திரங்கள் முழங்க,கணபதி ஹோமத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது. அதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அஷ்டோத்திர அர்ச்சனை நடத்தப்பட்டு, மகா தீபாராதனையுடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன. பக்தர்கள் அனைவருக்கும் மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் விநாயகப் பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேதிக் பிசார் சாஸ்தான் அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆலய நிகழ்ச்சிகள் அடங்கிய நிரல், புத்தகமாக வெளியிடப்பட்டது. நொய்டா அதிதி டிவிஸ் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் அரவிந்த் சோரிவாலாவும், டில்லி சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிதித்துறை இயக்குனர் சக்தி மணி ஆகியோரால் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.







– நமது செய்தியாளர் வெங்கடேஷ்   




Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா...

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்...

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us