செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிக்கு நாகாலாந்து கவர்னர் விருது

ஆகஸ்ட் 23,2020 

 கன்னியாகுமரி மாவட்டம் இலட்சுமிபுரத்தை சேர்ந்த அதிகாரிக்கு நாகலாந்து அரசு சிறந்த சேவைக்காக கவர்னர் விருது வழங்கி கௌரவித்து இருக்கின்றது. நாகாலாந்து வடகிழக்கு இந்தியாவில் ஒரு மலைப்பாங்கான மாநிலமாகும், இதன் மொத்த பரப்பளவு 16,579 சதுரடி. கி.மீ மற்றும் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் தொகை. மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் 79.55% என்றாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறைகளில் வளர்ந்த மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருக்கிறது. மாநிலத்தில் சரியான இணையதள தகவல்தொடர்பு வசதிகள் இல்லாதது, அரசாங்கம் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சமீபத்திய முன்னேற்றங்களைக் கொண்டுவருவதில் பெரும் தடையாக உள்ளது. 

COVID-19 முழு அடைப்பு நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளை இணையதள கல்வியை மாணவர்களின் வீட்டு வாசல்களுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தியபோது, நாகாலாந்தின் கல்வித் துறை ஆரம்பத்தில் நாகாலாந்தின் பள்ளி குழந்தைகள் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்தில் இருந்தது. மாநிலத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை இயக்குனராக பணிபுரியும், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷானவாஸும் அவருக்கு கீழ் உதவி இயக்குனராக பணிபுரியும் நெல்லையப்பன் இருவரும் அவர்களின் புதுமையான யோசனைகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள சிறிய அதிகாரிகளின் குழுவுடன் நாகாலாந்தை இந்தியாவின் இணையவழி கல்வி முறையின் முன்னோடியாக மாற்றினர். இப்போது தொடக்கக் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை மாணவர்களுக்கு இணையவழி மதிப்பீட்டை நடைமுறை படுத்திய முதல் மாநிலமாக நாகாலாந்து திகழ்கிறது. மாநில தலைநகரில் இருந்து சிறந்த ஆசிரியர்களை கொண்டு பள்ளிக்கல்வித்துறை தயாரித்த 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வீடியோ மற்றும் ஆடியோ பாடங்கள் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, யூடியூப், பேஸ்புக் மற்றும் ஜியோ டிவி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த பாடங்களுக்கு தேவைப்படும் கூடுதல் விளக்கங்கள் மற்றும் பயிற்சி செய்ய உதவும் வினாக்கள் ஆகியவை அந்தந்த பள்ளிகளால் மாணவர்களுக்குத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. மேலும் முழு ஒளிபரப்பின் வகுப்பு வாரியான பென் டிரைவ்களை அனைத்து அரசாங்க பள்ளிகளுக்கும் இலவசமாக விநியோகிக்கபடுகிறது. பள்ளிகள் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் வழக்கமான மதிப்பீட்டு முறைகளை பயன்படுத்த முடியாததால், எந்தவொரு மொபைல், கணினி அல்லது மடிக்கணி மூலமாகவும் எளிதாக அணுகக்கூடிய இணையவழி மாணவர் மதிப்பீட்டு முறையை உருவாக்கி செயல்படுத்துகிறது. COVID -19 முழு அடைப்பின் போது எதிர்கொள்ளும் சிரமங்கள் இருந்தபோதிலும், நாகாலாந்தின் மாணவர்களும் பெற்றோர்களும் கல்வி முறையின் சமீபத்திய போக்குகளைத் தழுவுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்ற மாநில மக்களில் ஒரு பகுதியினரின் தப்பெண்ணத்தை ஷானவாஸு- நெல்லையப்பன் குழு செல்லாததாக்கியது. இந்த இரண்டு தென்னிந்திய அதிகாரிகள் ஆற்றிய சிறந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், நாகாலாந்து அரசு சிறந்த சேவைக்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ஆளுநரின் தங்கப் பதக்கத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷானவாஸுக்கும் இரண்டாவது உயர்ந்த விருதான ஆளுநரின் பாராட்டுப்பத்திரம் நெல்லையப்பனுக்கும் வழங்குவதாக 15 ஆகஸ்ட் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தது. விருது பெறும் இருவரையும் மாநில முதல்வர் நிஃபு ரியோ மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் அறிவியல் –தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கான அரசு ஆலோசகருமான மொன்லுமோகிக்கான் ஆகியோர் பாராட்டினர்.– தினமலர் வாசகர் நெல்லையப்பன்

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா...

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்...

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us