செய்திகள்

நொய்டாவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்

செப்டம்பர் 20,2020 

  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் வேதிக் பிரசார் சன்ஸ்தான் அமைப்பு புரட்டாசி மாத துவக்கத்தை முன்னிட்டு, நொய்டாவில் உள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா திருக்கோயிலில் சிறப்பு பஜனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு செப்.,19 ம் தேதியன்று விஸ்வநாதன் தலைமையிலான விஎஸ்எஸ் பஜன் மண்டலி குழுவினரின் பஜனை இடம்பெற்றது.



இதற்காக தாயார் சமேத ஸ்ரீ வெங்கடேஷ்வரர், ஸ்ரீ கிருஷ்ணர் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விஸ்வநாதன் உடன் இணைந்து அரவிந்த் பாபு, வெங்கட்ராமன், கே.ராதாகிருஷ்ணன், காசி விஸ்வநாதன், மாலினி வேதமூர்த்தி, புவனா விஸ்வநாதன், புவனா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பஜனை பாடல்கள் பாடினர். 







மகா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகத்துடன் பஜனை நிறைவடைந்தது. டில்லி மற்றும் நொய்டாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பக்தர்கள் இந்த பஜனையில் கலந்து கொண்டனர். வேதிக் பிரசார் சன்ஸ்தான் அமைப்பின் உறுப்பிவர்களான ரவி சர்மா, வேதமூர்த்தி, பாலாஜி, சோமசுந்தரம் ஆகியோர் இந்த பஜனையில் பங்கேற்றனர். வாத்தியார் மணிகண்டன் பூஜைகளை நடத்தி, தீபாராதனை காண்பித்தார். பஜனை முழுவதும் பக்தர்கள் அனைவரும், வெங்கடரமண சுவாமிக்கு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.






பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணிவதையும் ஆலய நிர்வாகம் உறுதி செய்திருந்தது. ஆலய நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்ய சோப் மற்றும் சானிட்டைசர் ஆலய நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டிருந்தது.






– நமது செய்தியாளர் வெங்கடேஷ் 



Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா...

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்...

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us