செய்திகள்

நொய்டாவில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை சிறப்பு அபிஷேகங்கள்

அக்டோபர் 06,2020 

   நொய்டா ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் அக்டோபர்  05 ம் தேதி ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு, வேத மந்திரங்கள் ஓத, விநாயகப் பெருமான் மற்றும் கார்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. திரவியப் பொடி, மா பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிருதம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.






சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை ஆகியன ஒரே நாளில் அமைந்தததால் பக்தர்கள் விநாயகர் மற்றும் முருகப் பெருமான் குறித்த பக்திப் பாடல்களைப் பாடினர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கங்களையும் எழுப்பினர். மகா தீபாராதனையுடன் சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மகாபிரசாதம் வழங்கப்பட்டது. இதில் நொய்டா மட்டுமின்றி அண்டை பகுதிகளான டில்லி, காசியாபாத், இந்திரபுரம், வைஷாலி ஆகிய பகுதிகளில் இருந்தும் வந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.








இதே போன்று சிறப்பு அபிஷேகங்கள் நொய்டாவில் உள்ள வரசித்தி விநாயகர் திருக்கோயிலிலும் நடைபெற்றது. இரு கோயில்களிலும் நடைபெற்ற அனைத்து அபிஷேகங்களையும் வாத்தியார்கள் ஜெகதீசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் செய்தனர். இவ்விரு கோயில்களும் வேதிக் பிரசார் சன்ஸ்தான் அமைப்பால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.








கோவிட் 19 நோய் தொற்று பரவல் காரணமாக இந்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆலய நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர், சோப் ஆகியன ஆலய நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டிருந்தது.








– நமது செய்தியாளர் வெங்கடேஷ்   






Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா...

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்...

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us