செய்திகள்

நொய்டாவில் நவராத்திரி மகோற்சவம்

அக்டோபர் 19,2020 

  நொய்டா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் நவராத்திரி மகோற்சவ விழா அக்.,17 ம் தேதி துவங்கியது. கொலு அமைத்தல், தினசரி ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் பிற ஸ்லோகங்கள் பாராயணத்துடன் நவராத்திரி மகோற்சவ விழா சிறப்பாக துவங்கியது. 3 வது ஆண்டாக இவ்வாலயங்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. ஏழு படிகளில் அமைக்கப்பட்ட கொலுவுடன் ஆலய நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக உள்ளது.  

கொரோனா காலம் என்பதால் சானிடைசர், மாஸ்க் ஆகியனவும் கொலுவில் இடம்பெற்றுள்ளன. துணி பைகள், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை ஆகியவற்றையும் குறிப்பிட மறக்கவில்லை. லட்சுமி அனந்தநாராயணன், லதா சோமாஸ்கந்தன், மாலினி வேதமூர்த்தி, ரேவதி, வித்யா வெங்கட்ராமன், இந்திரா ராகவேந்திரன், உமா கணேஷ், ரேணுகா சிவராமன், உமா சரவணன், ஜானகி, காயத்ரி ஜெகதீசன், ரேணுகா, சுஜாதா, மைதிலி, பிரியா, விஜயா மற்றும் வாணி ஆகியோர் லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்டவைகளை பாராயணம் செய்தனர்.

3 வது ஆண்டாக அமைக்கப்பட்டுள்ள கொலுவில் தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், கணேசர், கார்த்திகேயர், ராம–லட்சுமண–சீதா–அனுமன், பாலாஜி, சரஸ்வதி, கல்யாண செட், பெண்கள் விளக்கு பூஜை செய்யும் சிலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. மிக முக்கியமாக கிரிக்கெட் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை குறிக்கும் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரு கோயில்களிலும் தினமும் மாலையில், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


- நமது செய்தியாளர் வெங்கடேஷ்
Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா...

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்...

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

டில்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us