செய்திகள்

உலக நன்மைக்காக நொய்டாவில் சண்டி ஹோமம்

அக்டோபர் 27,2020 

 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளை, ஸ்ரீ உத்திர இந்திரபிரஸ்தம் வைதிக சமாஜம் மற்றும் வேத வேதாங்க பாடசாலை ஆகியன இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்படுவதை போன்று நொய்டா சங்கர மடத்தில் இந்த ஆண்டும் சாரதா நவராத்திரி சண்டி ஹோமத்தை மிக சிறப்பாக நடத்தின.





ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசியுடன் இந்த வருடமும் சனாதன தர்மத்தின் படி, கோவிட் 19 லிருந்து விடுபடவும் உலக நன்மைக்காகவும்  அக்டோபர் 17 ம் தேதி முதல் சாரதா நவராத்திரியின் ஒன்பது நாட்களும் காலை  சப்தசதி தேவி மஹாத்ம்யம் பாராயணம், லலிதா சஹஸ்ர நாம வேத பாராயணங்கள், மாலையில் சஹஸ்ரநாம அர்ச்சனைகள் ,விஷேச ஆரத்திகள் நடைபெற்றன.  பூர்த்தி திணமாக அக்டோபர் 25 அன்று காலை 7 மணி முதல் விக்னேஸ்வர  பூஜை, தேவி மஹாத்ம்ய  பாராயணம், சத சண்டி மஹாயக்ஞம் ,1008 த்ரவ்யாஹுதி ஹோமங்கள்,தம்பதி பூஜை, நவ கன்யா பூஜை, வடு பூஜைகள், வஸோத்தார ஹோமங்கள், பூர்ணாஹுதிகள் ஆகியன  மிக சிறப்பாக நொய்டா சங்கர மட நிர்வாகிகள்  மற்றும் ஸ்ரீ சோமாஸ்கந்த வாத்யார் தலைமையிலும், சிறப்பு காஞ்சி மட வேத விற்பன்னர்கள் வரவழைக்கபட்டும், பாடசாலை வேத வித்யார்த்திகள், டில்லி–நொய்டாவாசி வேத விற்பன்னர்களும் சதசண்டி மஹாயக்ஞத்தை நடத்தி வைத்தனர். இதில் 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நொய்டா ஆன்மீக அன்பர்கள், மற்றும் பல சத்சங்கங்கள் சமாஜங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதியின் அருளை பெற்றனர் . மகாதீபாராதனையுடன் நிறைவடைந்த இந்த ஹோமத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மகாபிரசாதம் வழங்கப்பட்டது.









– நமது செய்தியாளர் வெங்கடேஷ்



Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் திருக்கார்த்திகை திருவிழா

டில்லியில் திருக்கார்த்திகை திருவிழா...

கார்த்திகை சோம வாரத்தின் சிறப்பு

கார்த்திகை சோம வாரத்தின் சிறப்பு...

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா...

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us