செய்திகள்

டிச.,5 , தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது

நவம்பர் 21,2020 

 உலகத் தமிழ் வர்த்தகசங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து தமிழ் பாரம்பரிய மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸ்லன்ஸ்  விருது டிசம்பர் 5 ஆம் தேதி சென்னையில்  வழங்கப்பட உள்ளது. நம் பாரம்பரிய இயற்கை மருத்துவமான சித்த மருத்துவம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு தமிழக அரசால் சித்த மருத்துவ கல்லூரியாக உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மருத்துவர்களை உருவாக்கி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் அலோபதி மருத்துவத்துடன் இணைந்து சித்த மருத்துவர்கள் பணியாற்றியது கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வர நம் பாரம்பரிய சித்த மருத்துவம் பேருதவியாக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் தற்போது சித்த மருத்துவத்தின் மகிமையை விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக மக்களுக்கு சித்த மருத்துவத்தை விரிவாக்கம் செய்யவும்  ஆயுஷ் எக்ஸ்லன்ஸ்  விருது மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். 
மேலும் இந்நிகழ்வில் மருத்துவர்களை தேர்ந்தெடுக்க மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சித்த கல்லூரி மற்றும் இந்திய மருந்தக இயக்குனரகம், இம்மூன்று அரசு அமைப்புகளின் மூலம் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கபட உள்ளது. இதில் மாநில, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என உலகத் தமிழ் வர்த்தகசங்க மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு  தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.– செல்வக்குமார் (தலைவர், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு)

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் திருக்கார்த்திகை திருவிழா

டில்லியில் திருக்கார்த்திகை திருவிழா...

கார்த்திகை சோம வாரத்தின் சிறப்பு

கார்த்திகை சோம வாரத்தின் சிறப்பு...

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா

டில்லியில் புத்தக வெளியீட்டு விழா...

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்

ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us