நொய்டா ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் நவம்பர் 20 ம் தேதி கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ கார்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
எண்ணெய், திரவியப்பொடி, மாவு பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், நெய், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம் ஆகிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் தமிழகத்தின் பிற முருகன் கோயில்களில் நடைபெற்ற அதே வரிசையில் நொய்டா ஆலயத்திலும் மணிகண்ட சர்மா வாத்தியாரால் அபிஷேகங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
இவ்வாலயத்தில் முதல் முறையாக இந்தாண்டு காவடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டபடி கலந்து கொண்டனர். கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி ஆகியவற்றை பக்தர்கள் பாராயணம் செய்தனர். மகா தீபாராதனையுடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன. பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை ஆகியன பிரசாதமாக பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாலையில் விஎஸ்எஸ் பஜன் மண்டலியின் பஜனை நிகழ்ச்சி ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கந்தன் மற்றும் திருப்புகழ் இசைக்கப்பட்டது.
'முருகனின் மறு பெயர் அழகு' என்பது தான் நாள் முழுவதும் பக்தர்கள் அனைவரின் பேச்சாக இருந்தது. நொய்டா மட்டுமின்றி டில்லியின் அண்டை பகுதிகள், இந்திரபுரம், வைஷாலி, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கார்த்திகேயரின் அருளை பெற்றுச் சென்றனர்.
கொரோனா நோய் பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் கூடுவதற்கு கட்டுப்பாடுகளும், காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையிலும் ஏராளமான பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர். ஆலய நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்ய சோப் மற்றும் சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது.
– நமது செய்தியாளர் வெங்கடேஷ்
ஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.