செய்திகள்

டில்லியில் காரடையான் நோன்பு

மார்ச் 17,2021 

   புதுடில்லி : காரடையான் நோன்பு அல்லது சாவித்திரி விரதம் என்பது மாசியும் பங்குனியும் சேரும் காலத்தில் அனுசரிக்கப்படும் விரதமாகும். திருமணமான தமிழ் பெண்களால் அனுசரிக்கப்படும் முக்கியமான விரதங்களில் இதுவும் ஒன்று. 
இறைவன் தங்களின் கணவா்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கிறார்கள். இந்த காரடையான் நோன்பு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி நோன்பு ஆகியவை. 
காரடையான் நோன்பு, புராணத்தில் வருகின்ற சத்தியவான், சாவித்திரி என்ற இரண்டு முக்கியக் கதாப்பாத்திரங்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. அதாவது இந்த நாளில், மரணத்தின் கடவுளான எமனின் பிடியில் இருந்து சாவித்திரி தனது கணவனான சத்தியவானைக் காப்பாற்றியதாக நம்பப்படுகிறது. அதனால் இந்த நோன்பு சாவித்திரி நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

காரடையான் நோன்பு நாள் அன்று, திருமணமான பெண்கள், பெண் கடவுளான கௌரியை வழிபட்டு, அதற்குரிய அரிசி மாவில் செய்த அடையை நெய்வேத்யமாக படைத்து பூஜைகள் முடிந்த பின்பு மஞ்சள் சரடு அல்லது நோன்பு சரடு என்று அழைக்கப்படும் புனிதமான மஞ்சள் கயிற்றைத் தங்களின் கணவா்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக அணிந்து கொள்வா்.
திருமணமான பெண்கள் தங்கள் கணவா்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த காரடையான் நோன்பை அனுசரிக்கிறார்கள்.அதே நேரத்தில் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு ஒரு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நோன்பை அனுசரிப்பா். இந்த நாளில் திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு இந்து பெண் தெய்வங்களிடம் தங்களுடைய கணவா்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்றும் அல்லது நல்லதொரு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வது இந்த விரதத்தின் முக்கிய அம்சம்.


சாவித்திரித் தனது கணவன் சத்தியவானின் உயிரை எமன் எடுக்காமல் விட்டதற்கு நன்றியாக, உருகாத வெண்ணெயோடு கார அடை செய்து, அதை எமனுக்கு காணிக்கையாக அளித்தாா் என்று நம்பப்படுகிறது.
வடநாட்டில் ஐப்பசி மாதம் சதுர்த்தியில் கர்வா சவுத் என்ற பெயரில் இதேபோன்று விரதம் இருக்கிறார்கள்.அன்று சூர்ய உதயம் முதல் நீர் கூட கொள்ளாமல் கடும் விரதம் இருந்து இரவு சந்திரனை பார்த்த பின் முடிக்கிறார்கள். இந்த விரத மகிமை சத்யவான் சாவித்திரி கதையை ஆதாரமாக சொல்லப்படுகிறது.
இந்த கதையை நீலகண்ட சிவன், சாவித்திரி புராணம் என்ற தொகுப்பில் பாடல்களாக எழுதியுள்ளார்.இதை மாசி மாதம் பெண்கள் குழுவாக சேர்ந்து பாடுவதை பார்க்கிறோம்.தலைநகரில் இந்த சாவித்திரி புராணத்தை காலஞ்சென்ற வசந்தா லெட்சுமிநாரணன் சொல்லி கொடுத்து இன்று வரை தொடர்ந்து பாடி வருவது சிறப்பு.
நமது பாரம்பரியம் இறைபக்தி இரண்டும் தலைமுறை தாண்டி தொடர்வது சனாதன தர்மத்திற்கு எடுத்துகாட்டு. தில்லியில் திருமதி விஜயலெக்ஷ்மி ரத்னம், கீதா ராஜாராம் இருவர் தலைமையில் அவரது குழுவினர் மயூர்விகார் காருண்ய மகா கணபதி கோவில், காமாட்சி அம்மன் கோவில், இர்வின் ரோடு பிள்ளையார் கோவில் குர்கான் கணேஷ் மந்திர் ஆகிய இடங்களில் பாராயணம் செய்தார்கள்.மகளிர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
– நமது செய்தியாளர் மீனா வெங்கி

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us