செய்திகள்

டில்லியில் பாரதி என்றொரு மானுடன்

மார்ச் 21,2021 

  புதுடில்லி : தலைநகர் தில்லி தமிழ்ச்சங்கம் பாரதி பற்றிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கை ஏற்றி பாரதியின் படத்திற்கு மலர்தூவி வணங்கிய பின் நிகழ்ச்சி  தொடங்கியது.இணைச்செயலாளர் ஜி .என்.இளங்கோவன் வரவேற்க சங்க தலைவர் வீ.ரெங்கநாதன், தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் வேங்கட சுப்ரமணியன், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவையின் பொதுச்செயலாலர் இரா முகுந்தன், கம்போடியா தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ராமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.தில்லி சட்டம் பயிலும் மாணவி நிகிதா ராமலிங்கம் பாரதியின் மூன்று முத்தான பாடல்களை இனிமையாக பாடினார். நல்லதோர் வீணை செய்து ..பாடல் ரசிக்க வைத்ததோடு நெஞ்சை நெகிழ வைத்தது. பாரதி என்றெரு மானுடன் என்ற தலைப்பில் பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் (சென்னை) மிக அருமையாக பேசினார்.


பாரதியின் பிறப்பு இளமைக்காலம்..எழுத்தாளனாய் கவிஞனாய் நாட்டுப்பற்று மிக்க குடிமகனாய் வாழ்ந்த நாட்களை நம்கண்முன் கொணர்ந்தார்..அவரது இல்வாழ்க்கையில் செல்வம் தட்டுப்பாடாக இருந்தபோதும் செல்லம்மாவுடன் எப்படி ஒரு உயர்ந்த நோக்கத்துடன். சகமனிதர்களைதாண்டி, விலங்குகள்,காக்கை குருவிகளையும் தமது உறவாக பாவித்து வாழ்ந்த நிகழ்வுகள் நெஞ்சைத்தொட்டன.


அவரது வீரமிக்க வரிகள், நாட்டுப்பற்று மிக்க பாடல்களை கேட்டு வளர்ந்த நமக்கு தெரியாத அவரது மற்ற முகங்களை காட்டினார். பிறப்பால் நல்ல வளமிக்க குடும்பத்தில் பிறந்த அவர் காலச்சூழ்நிலையால் வறுமை கோட்டிற்கு தள்ளப்பட்ட போதும் தன்மானத்துடன் வாழ்ந்தது..எங்கோ கரும்பு தோட்டத்தில் அடிமையாய் இன்னலுக்கு ஆளான தமிழனுக்கு குரல் கொடுத்தது.. பரிசுக்கும் புகழுக்கும் மயங்காது..உன்னத வாழ்க்கை வாழ்ந்தது .. தலைவர்கள் பலரின் அன்பிற்கு பாத்திரமானது, உலக தலைவர்களை உயர்ந்து பார்க்க வைத்தது,என அவரது வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல் நமக்கு காட்டி இறுதியில் அவரது கடைசி ஊர்வலம்..நம்கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது.


தெரிந்த கவிஞர் பாரதியை மானுடன் என்ற வரைபடத்தில் சித்தரித்து நம்மை மீண்டும் ஒருமுறை பார்க்க வைத்ததோடு அந்த உன்னத மகாகவிக்கு அஞ்சலி செலுத்த வைத்தார்.அற்புதமான சொற்பொழிவு.. அனைவரும் மனம் நிறைந்து வாழ்த்தும்படி இருந்தது. நன்றியுரை சங்க துணைத்தலைவர் குருமூர்த்தி வழங்கினார்.


நிகழ்வை சங்க இணைப்பொருளாளர் ராஜ்குமார் பாலா அழகாகவும் சுவைபடவும் தொகுத்து வழங்கினார். கொரோனா காரணமாக பொது நிகழ்ச்சிகள் தடை விலகி நடந்த நிகழ்ச்சி..அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மக்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.


– நமது செய்தியாளர் மீனா வெங்கி
Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us