செய்திகள்

டில்லி கணேசர் ஆலயத்தில் ஏகாதசி ருத்ரஜபம்

மார்ச் 25,2021 

  கிழக்கு டில்லி ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலயத்தில் மார்ச் 21 ம் தேதி உலக அமைதிக்காகவும், அனைவரின் நலனுக்காகவும் ஏகாதசி ருத்ரஜபம் நடத்தப்பட்டது. 40 க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் 11 முறை ஸ்ரீ ருத்ரத்துடன் மகான்சய பூர்வாங்க ஏகாதசி ருத்ரஜபம் ஓதினர்.



இந்நிகழ்வை முன்னிட்டு கங்கரஹர கணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம், கும்ப ஜலம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. அனைத்து அபிஷேகங்களும் தலைமை குருக்கள் ஜெய்ஷங்கரால் செய்யப்பட்டது.







சங்கடஹர கணபதி ஆலயத்தால் நிர்வாகிக்கப்படும் வசுந்தரா என்கிளேவ் சர்வேஸ்வரா சமாஜத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ருத்ரஜபத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா தீபாராதனையுடன் நிறைவடைந்த இந்த ருத்ரஜபத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.






– நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்



Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us