செய்திகள்

டில்லியில் சிவராத்திரி விழா

மார்ச் 24,2021 

 சிவராத்திரி எனும் புண்ணியம் நிறைந்த நன்னாளில், இரவில் நான்கு ஜாமங்களிலும் நாலுகால பூஜைகள் நடைபெறுகிறது. அப்போது சிவலிங்கமானது குளிரக் குளிர வில்வங்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்படும். அவரின் மனம் குளிரக் குளிர ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும். சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.


இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும் என பார்வதி தேவி ஈசனிடம் கேட்க, அப்படியே ஆகட்டும் என வரம் தந்தருளினார் ஈசன். எனவே, மற்ற நாளைவிட, மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது நம்பிக்கை.மக்கள் மிக ஈடுபாட்டுடன் இந்த பூஜையில் கலந்து கொள்வதை பார்க்கிறோம்.இந்த சமயத்தில் இன்னும் பல சிவராத்திரி பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வது  சிறப்பு சேர்க்கும். 


திரியோதசி முன் இரவு வரை இருக்க, நடு இரவில் சதுர்த்தி வந்தால் அது மிக விசேஷம். அது உத்தம சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. சூரிய உதயம் முதல் மறுநாள் வரை சதுர்த்தசி இருப்பது மத்ய சிவராத்திரி.


முதல் நாள் இரவில் நிசி நேரத்தில் சதுர்த்தசி நேராமல் மறுநாள் இரவு நிசி நேரத்தில் சதுர்த்தசியும், அமாவாசையும் சந்திப்பது அதம சிவராத்திரி. சோமவாரத்தில் வரும் மகா சிவராத்திரி விரதத்திற்கு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.


சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்வதும் பூஜையில் பங்கேற்பதும் நல்லது.


தலைநகரில் பல கோவில்களில் சிவராத்திரி சிறப்புஅபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.இன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவே மக்களை கோவில்களில் பார்க்க முடிகிறது.தலை நகரில் சிவன் அமர் ஆலயங்களில் சிவராத்திரி அதன் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது.


– நமது செய்தியாளர் மீனா வெங்கிAdvertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us