செய்திகள்

டில்லியில் சிவராத்திரியும் சிவோகமும்

ஏப்ரல் 13,2021 

 உலகத்துக்கு ஆதியும் அந்தமுமாய் இருப்பவர், சிவபெருமான். பிரளய காலத்தில் ஜீவன்கள் எல்லாம் அவருள் ஒடுங்கிவிடும். ஆனால் எப்போதும் சிவனை பிரியாதவளாக இருப்பவள் சக்தியாகிய பார்வதி தேவி.
அப்படி ஒரு பிரளயம் வந்து உலக உயிர்கள் எல்லாம் சிவனிடம் ஒடுங்கிய சமயம் அன்னைக்கு இந்த உலகை மீண்டும் உருவாக்க இறைவனை வேண்டுகிறாள் . சிவனை பூஜித்தாள். அந்த பூஜைக்கு மனமிரங்கிய எம்மானும் மீண்டும் உயிர்களையும் ஈரேழு பதினாலு உலகங்களையும் படைக்க உத்தரவிட்டார்.
அப்போது பார்வதி தேவி, தான் ஈசனை நினைத்து பூஜைகள் செய்து வழிபட்ட காலம் சிவனுக்குரிய காலமாகப் போற்றப்பட வேண்டும் என்றும், அன்று சிவனை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்க அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டினாள். சிவனும் அவ்வாறே அருளிட அந்த நாளே சிவராத்திரி என்று சிவ மகா புராணம் சொல்கிறது.


பார்வதி தேவியைத் தொடர்ந்து சனகாதி முனிவர்களும், நந்தியும் சிவராத்திரி விரதமிருந்து தாங்கள் விரும்பியதைப் பெற்றதாகவும் அப்புராணம் இயம்புகிறது.
இந்துக்கள் கொண்டாடும் இந்த சிவராத்திரி வடஇந்தியாவிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த புராணம் கதைகள் ஒருபுறம் இருக்க, பக்தர்கள் விரதமிருந்து சிவனை பூஜித்து வழிபடுகிறார்கள்.
கலை உலகினர் இந்த சிவராத்திரி நாளில் இசை நடன நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் சமர்ப்பணத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து மகிழ்கிறார்கள்.
சிவன் ஆடல் அரசன்..ஆடலுக்கு பாடலும் அவசியம்.
மிருதங்க வித்வான் தஞ்சாவூர் கேசவன் மற்றும் பரத கலைஞர் நீரஜா ஷர்மா இணைந்து ,தில்லி துவாரகா கணேஷ் மந்திர் ( செக்டார் 12) வளாகத்தில் மூன்று நாட்கள் இசை நடன நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
கதக் நடனகலைஞர்கள் நந்தினி ,கமலினி ,குரு ஜிதேந்திர பிரசாத் விளக்கேற்றி துவக்கிய கலை வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இறுதி நாள் ...சிக்கா சர்மாவின் கதக் நடன நிகழ்ச்சியை தொடர்ந்து வெங்கடேஸ்வரன் குப்பசுவாமியின் கர்நாடக சங்கீதம் இனிய மாலைக்கு இனிமை கூட்டியது.அடுத்து அம்பன் மிஸ்ராவின் ஹிந்துஸ்தானி சங்கீதம். தொடர்ந்து கேசவன் தலைமையில் தாளவாத்ய கச்சேரி நடைபெற்றது.

பல கலைஞர்கள் பலவித வாத்யங்கள்மிருதங்கம் தஞ்சாவூர் கேசவன் நடுநாயகமாக தலைமை வகிக்க வெங்கடேஸ்வரன் பாடிட, ராகவேந்திரா வயலினில் தொடர, ரிதத்தில் கல்யாண் சிங் தபலாவில்,அபிஷேக் கெளன்,ரபீக் அகமத் ரா‌ஜத்தானிய கர்தாலில் வாத்யத்தில் இணைந்து வாசிக்க,மேலை நாட்டு இசைக்கருவி ஃபேஸ் கிடாரில் அங்கண்ணும்லீட் கிடாரில் கிரிதரும் உடன் வர..ஆகா என்ன ஒரு இசை சாரல்.அற்புத விருந்து.மொழி என்னும் வரை கோட்டிற்கு அப்பால் இசை நம்மை ஊடுவி இணத்து மகிழ்விப்பதை உணரமுடிந்தது.
பிரம்மாண்ட கணபதி சிலைக்கு முன்னால் திறந்த வெளியில் சிவனை சிவோகமாய் கொண்டாடிய விழா அமைப்பாளர் குழுவிற்கு நமது வாழ்த்துக்கள்.
– நமது செய்தியாளர் மீனா வெங்கிAdvertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us