செய்திகள்

இந்திய பொறியியல் கழக ஒருநாள் கருத்தரங்கம்

ஏப்ரல் 16,2021 

 இந்திய பொறியியல் கழகத்தின் ஒரு நாள் கருத்தரங்கம் ஏப்ரல் 7 ம் தேதி, தொழில்முறை பொறியாளர்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்றது. துவக்க நிகழ்வாக இந்திய பொறியியல் கழக தலைவர் டாக்டர் உதீஷ் கோஹ்லி வரவேற்புரை ஆற்றினார். ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி  திட்ட தலைவரும், முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினருமான டாக்டர் கிரித் பரிக் மற்றம் டிஎஸ்ஐஆர் முன்னாள் செயலாளர் டாக்டர். ஆர்.ஏ.மஷேல்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


இவ்விழாவில் தொழில்துறைக்கான விருது ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கும், ஆலோசனை துறைக்கான விருது பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக இயக்குனர் டாக்டர்.டெஸ்ஸி தாமஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு சிறப்புரையாற்றினார். நன்றி உரையை இந்திய பொறியியல் கழக செயலாளர் டாக்டர் பி.ஆர்.ஸ்வரூப் வழங்கினார்.

விழாவின் முதல் அமர்வில் பொறியியல் துறை சார்ந்த வித்யாஷங்கர் ஹஸ்கிர், டாக்டர் எஸ்.பி.ரகுநாத், சரிபள்ளி சூரியநாராயணா, டி.டி.மகேஸ்வரி, எஸ்.ரத்னவேல், டாக்டர்.எஸ்.மோகன், ரங்கநாதன் சந்திரசேகர், டாக்டர் வி.அபய்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  
இந்தியாவிற்கு எதற்காக தொழில்முறை பொறியாளர்கள் தேவை என்பது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் பகுதியில் இந்திய வேளாண் பொறியயல் கழக தலைவர் பேராசிரியர் இந்திரா மணி மிஸ்ரா, கனடாவில் இருந்து பி.எஸ்.பனி, பேராசிரியர் ஜெ.டபிள்யூ.பகல், பேராசிரியர் ஓ.பி.குப்தா, டாக்டர்.பி.ஆர்.ஸ்வரூப் ஆகியோர் பங்கேற்று, உரையாற்றினர்.


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us