செய்திகள்

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

மே 05,2021 

 நொய்டா ஸ்ரீ விநாயகா, ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் வேதிக் பிரசார் சன்ஸ்தான் அமைப்பின் சார்பாக வாராந்திர ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக பக்தர்களின் வசதிக்காக இணைய வழியில் இந்த பாராயண நிகழ்ச்சியை நடத்த ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வாரம் நான்காம் ஆண்டு துவக்கம் என்பதால் வாராந்திர கூட்டு பாராயணத்துடன், பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.மிகச் சிறந்த வழியாக சமூக பிரார்த்தனைகள், பல்வேறு ஹோமங்கள் ஆகியவற்றில் வீட்டில் இருந்தே பங்கேற்று, மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர் அடியார்கள். நொய்டாவில் சமூக, கலைச்சார அமைப்பாக செயல்பட்டு வரும் வேதிக் பிரசார் சன்ஸ்தான், பக்தர்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் நலனுக்காக தன்வந்திரி ஹோமம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தது.
வாராந்திர பாராயணமாக ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீ நாராயணீயம், முருக கோஷம் ஆகியன மனித குலத்தின் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ விநாயகர் – ஸ்ரீ கார்த்திகேயர் ஆலயத்திலும் இந்நிகழ்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நொய்டா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இதில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  


நான்காம் ஆண்டு பாராயண நிகழ்வை துவக்குவதற்கு முன், வேதிக் பிரசார் சன்ஸ்தான் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான ராஜு ஐயர், இணையம் வழியாக இந்த பாராயண நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று, தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.  தற்போதுள்ள கொரோனா நிலை சரியான பிறகு தொடர்ந்து ஆலய வளாகத்தில் வாராந்திர பாராயண நிகழ்வுகள் நடத்தப்படும் என அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா அல்லது ஊரடங்கு காலத்திலும் இவ்விரு ஆலயங்களிலும் வேதிக் பிரசார் சன்ஸ்தான் சார்பில், பக்தர்களின் நலனுக்காக தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
– நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

உலக அமைதிக்காக தலைநகரில் சண்டி ேஹாமம்

உலக அமைதிக்காக தலைநகரில் சண்டி ேஹாமம்...

ஆனிமாத சிறப்புக்கள்

ஆனிமாத சிறப்புக்கள்...

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்...

இந்திய பொறியியல் கழக ஒருநாள் கருத்தரங்கம்

இந்திய பொறியியல் கழக ஒருநாள் கருத்தரங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us