செய்திகள்

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

மே 28,2021 

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி, ஸ்ரீ கார்த்திகேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், பழச்சாறு, பன்னீர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிேஷகம் நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ரோஜா, துளசி, வெள்ளை சாமந்தி, மஞ்சள் சாமந்தி, மல்லி போன்ற மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகாதீபாராதனையுடன் காலை நிகழச்சி நிறைவு பெறறது. பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஸ்ரீ விநாயகர் பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் பக்தர்கள் முககவசம் அணிந்து வந்து அபிஷேகத்தை கண்டு களித்தனர். 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'முருகனின் மறு பெயர் அழகு' என்று பக்தர்கள் முழங்கினர்.



காலையில் கோயிலுக்கு வர இயலாத பக்தர்களுக்காக, மாலையில் ஆன்லைனில் கந்தசஷ்டி கவச குழு பாராயணத்திற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஊரடங்கு நிலையிலும், சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக காஜியாபாத்திலிருந்து வந்திருந்த மணிகண்டன் வாத்தியாருக்கு கோயில் நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

கொரோனாவாக இருந்தாலும் ஊரடங்காக இருந்தாலும் பக்தர்கள் வசதிக்காக, வரசித்தி விநாயகர் கோயில் மற்றும் விநாயகர் கார்த்திகேயர் கோயிலில் தினசரி சடங்குகளை கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. பக்தர்கள் வசதிக்காக, கோயில் வாயிலில் சானிடைசர் மற்றும் கை கழுவுவதற்கான சோப் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்




Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஆனிமாத சிறப்புக்கள்

ஆனிமாத சிறப்புக்கள்...

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்...

இந்திய பொறியியல் கழக ஒருநாள் கருத்தரங்கம்

இந்திய பொறியியல் கழக ஒருநாள் கருத்தரங்கம்...

டில்லியில் சிவராத்திரியும் சிவோகமும்

டில்லியில் சிவராத்திரியும் சிவோகமும்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us