செய்திகள்

சோமவார பிரதோஷம்

ஜூன் 06,2021 

 சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. பரமேஸ்வரன் விஷம் உண்டது, ஏகாதசி தினத்தில்; அயர்ச்சியில் படுத்து, கண்ணுறங்கியது துவாதசியில்; உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில்... இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். 14 ஆண்டு காலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள்.

சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். 


இந்த ஊரடங்கு சமயத்தில் இல்லத்தில் இருந்தபடி ஈசனின் பாதத்தை  சிக்கெனப் பற்றுவோம்.இந்த வேதனை தினங்கள் மாறிட வேண்டுவோம்.


– நமது செய்தியாளர் மீனா வெங்கட்

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தெலுங்கானா தமிழ்ச் சங்க இணையவழி தமிழ் வகுப்புகள் தொடக்க விழா

தெலுங்கானா தமிழ்ச் சங்க இணையவழி தமிழ் வகுப்புகள் தொடக்க விழா...

நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் பணிகளுக்கு ஸ்ரீ காஞ்சி மடம் பாராட்டு

நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் பணிகளுக்கு ஸ்ரீ காஞ்சி மடம் பாராட்டு...

நொய்டா கோயிலில் அனுஷ நட்சத்திர பூஜை ஓராண்டு நிறைவு

நொய்டா கோயிலில் அனுஷ நட்சத்திர பூஜை ஓராண்டு நிறைவு ...

ஏழாவது சர்வதேச யோகா தினம்: குருமகான் பரஞ்சோதியார் வாழ்த்து

ஏழாவது சர்வதேச யோகா தினம்: குருமகான் பரஞ்சோதியார் வாழ்த்து...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us