செய்திகள்

ஏழாவது சர்வதேச யோகா தினம்: குருமகான் பரஞ்சோதியார் வாழ்த்து

ஜூன் 22,2021 

  ஏழாவது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி  குருமகான் பரஞ்சோதியார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:சத்குருவேசரணம்! சந்தோஷம்! சந்தோஷம்! சந்தோஷம்! அங்குஇங்குஎங்குமாய்எல்லாமாய், நீக்கமற நிறைந்திருக்கின்ற, பரிபூரணத்தில் இருக்கின்ற பரம்பொருள், பரஞ்சோதியின்பெரும்கருணையினால்எல்லோரும்எல்லாம்பெற்று, இன்புற்று வாழ, வையகம்சாந்தியும், சமாதானமும், சந்தோஷமும்அடையபரிபூர்ணநல்லாசிகள். 


ஏழாவது சர்வதேசயோகதினமான இந்தசுபதினத்தில்உலகமாந்தர்கள்அனைவரும், இந்த நெருக்கடிநிலையில்இருந்து, இயல்பானநிலையில்எல்லோரும்ஆரோக்கியம்பெற்று, நாம் ஆரோக்கியமானவர்கள், நமதுகுடும்பம்ஆரோக்கியமானது, நமது மாநிலம் ஆரோக்கியமானது,  நமதுதேசம்ஆரோக்கியமானது, நமதுஉலகம்ஆரோக்கியமானது, நமதுபிரபஞ்சம்ஆரோக்கியமானது.ஆகவேஆரோக்கியஉலகத்தைஉருவாக்க, இந்த சர்வதேச யோகா தினத்திலேயே எல்லோரும் நலமும் வளமும்மகிழ்வும்பெறபரிபூரணநல்லாசிகள்.


யோகம்: இணைத்தல், ஒன்றுபடுதல், ஐக்கியப்படுத்தல். எதைஎதனோடுஇணைத்தல்?இந்தஉடல், மனம், அறிவுஎன்றஇவைகளைகடந்துஉள்இருக்கின்ற, உணர்வோடு ஒருங்கிணைத்தல்,  சேர்த்தல். நாம்எந்தசெயலைசெய்கின்றபொழுதும், உணர்வோடு செய்யப்படுகின்ற செயல்கள்அனைத்தும், வெற்றிகரமாகமுடிகிறது. இந்தயோகம்எண்ணம், சொல், செயல்என்றமூன்றும்ஒருங்கிணைந்துசெய்யப்படுகிறது. எண்ணுவதுஒன்று, சொல்வது ஒன்று, செய்வதுஒன்று, என்றுஇருக்கும்பொழுதுஅந்தசெயல்களில்திறன்இருக்காது. ஏனோதானோ என்றஒருசெயல்தான்இருக்கிறது. ஆகவேசெயல்திறன்: திறன் மிகுந்த செயலைச் செய்ய, ஒரு நிறைவான செயலைச் செய்ய வேண்டும் என்றால் அந்தச் செயலோடு உணர்வுஒன்றவேண்டும்.


ஆகவேதான் அகவிழிப்போடுபார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், பேசுதல், செய்தல் என்றஇந்தஉடலோடுசெய்கின்றஅனைத்தும்ஒருங்கிணைந்துசெய்தல். ஒரு கல்வி கற்கின்ற பொழுதுகூட, மனம்ஊன்றிப்படிக்கவேண்டும்: கருத்தூன்றிபடித்தல். அதேபோல ஏதேனும் ஒருவேலையைச்செய்யவேண்டுமென்றால், ஒரு சமையல் செய்கின்ற வேலையிலும் மனம் ஒன்றி இருக்கவேண்டும். அந்தஉணவுகள்அனைத்தும்சுவைஉடையதாகஇருக்கவேண்டும். 


ஆகவேயோகம்என்பதுஒருங்கிணைந்துசெய்யப்படுகின்றசெயல். செயல்திறன் மிகுந்து செய்கின்ற செயல்களைசெய்யவைப்பதுயோகம். அதற்குஇந்தஉடல்நலம்பெறவேண்டும், மனம்வளம்பெறவேண்டும், அறிவுதெளிவுபெறவேண்டும். ஆகவேமுதலில்உடல்நலம்காக்க, ஆசனப்பயிற்சிகள். மனவளம்காக்க, மூச்சுப்பயிற்சிகள், மனப்பயிற்சிகள். அறிவு தெளிவு பெற,  தியானபயிற்சிகள். இவைகளை எல்லாம் ஒருங்கிணைந்த செயல்களைதான் யோகம் என்றுசொல்லப்படுகிறதுயோகவாழ்வு. 


யோகவாழ்வு ஒருமனிதனுக்குஅமைதியைதருகிறது. இன்றைய காலகட்டத்தில் உலக மாந்தர்கள் அனைவருக்கும், உடல்நலம்குன்றிஇருப்பதோடு, மனஅமைதிகுன்றிஇருக்கிறது. ஏனென்றால்இந்தமனம்தெளிவாக, மனம்உறுதியாகஇருந்தால்எதையும்ஏற்றுக்கொள்ளுகிற, எதையும்மாற்றுகிறவல்லமைநமக்குவருகிறது. இன்றையகால கட்டத்தில் இந்த கொரோனாவைக் குறித்தஅச்சஉணர்வு. ஆகவேஇந்தஅச்சஉணர்வைநீக்க, முககவசத்தோடு, சமூகஇடைவெளியோடும்முன்னெச்சரிக்கையோடும்இருந்தால், எந்த பாதிப்புகளில் இருந்தும் நாம் விலகிக்கொள்ளலாம். ஆரோக்கியமாகநாம்வாழமுடியும்.


ஆகவே உடல்ஆரோக்கியத்தோடுவாழ்வதற்கு, முதலில்மனம்அமைதிபெறவேண்டும். இன்று உலகம் முழுவதும்இந்தஅச்சஉணர்வு; அதேபோல வருங்காலத்தில் ஒவ்வொரு மனிதனின் பொருளாதாரத்தைகுறித்தஅச்சம்.; கல்வியைக்குறித்துஅச்சம்; வாழ்வியலைக் குறித்த அச்ச உணர்வுஎல்லோருக்கும்இருக்கிறது. 


ஆகவே  Yoga for Peace. முதலிலேமனிதனுக்குயோகம்அமைதியைஅளிக்கிறது. எப்படிப்பட்ட அமைதி?  புறஅமைதியா? அகஅமைதி!ஆகவேதான்உலகம்அமைதிபெறவேண்டுமென்றால், தனிமனிதன்அமைதிபெறவேண்டும். தனிமனிதஅமைதிமூலமேஉலகஅமைதி. இந்த உலகஅமைதி  Universal Peace through Individual Peace. Individual peace through Yoga.


ஆகவே இந்தயோகக்கலை, உடலைவலிமைப்படுத்துகிறது, உள்ளத்தை உறுதிப்படுத்துகிறது வளப்படுத்துகிறது, அறிவைதெளிவுபடுத்துகிறது. உடல்திறன், மனததிறன், அறிவுதிறன். இந்தஅறிவுத்திறன்மூலம்பொருளாதாரத்திறன், சமூகநலத்திறன், முடிவிலே ஆன்மீகத்திறன் என்ற ஆறுநிலைகளில்ஒருதனிமனிதனைதிறன்மிக்கமனிதனாகமாற்றுகிறது. ஒருதிறன்மிக்கமனிதனைஉருவாக்கும்பொழுது, சமுதாயமே திறன்மிகு சமுதாயமாக மாறுகிறது. உலகம்திறன்மிகுஉலகமாகமாறுகிறது.


ஆகவே தனிமனிததிறன்வளர்ப்புக்கும், தனிமனிதஅமைதிக்கும்இந்தயோகா, மிகமிக பயன்படுகிறது. இந்தஅமைதிநிலைஎங்குஇருக்கிறது? அமைதிகடந்துஉள்ளேஇருக்கிறது. கடந்தஉள்நிலை!அதுமுதலில்நமக்குவிழிப்புநிலை, கனவுநிலை, உறக்கநிலை என்ற மூன்று நிலைகளுக்கும் அப்பால்உள்ளதுஅது. அதுதான்அனைத்தையும்உருவாக்குகிறது, அனைத்தையும் காக்கிறது, அனைத்தையும்மாற்றுகிறது. ஆகவே அப்படிப்பட்ட அந்தநிலையை, அடையச்செய்வதுதான்இந்தயோகம். இந்த யோகம் தனி மனிதன் முதலிலே உடல்நிலை, பிறகுமனநிலை, பிறகுஅறிவுநிலை ,இந்தமூன்றையும்ஒருங்கிணைத்து, ஓர்அமைதிநிலைக்குஅழைத்துச்செல்கிறது. 


ஆகவே தனிமனிதன்இந்தயோகத்தின்மூலம், உடல்ஆரோக்கியத்தோடுவிளங்குகிறான். Prevention is better than cure. வரும்முன்காப்பதுயோகம். ஆகவேஉலகமக்கள்இந்தநல்லநாளிலே, இந்தயோகப்பயிற்சிகளைபெற்று, உடல்ஆரோக்கியத்தோடு, மனஅமைதியோடு, அறிவு தெளிவோடு, நிறைசெல்வத்தோடுஎன்றும்மகிழ்வுடன், எதிலும்நிறைவுடன், நீடூழி வாழ பரிபூரணநல்லாசிகள்.


ஆகவேஇந்தயோகதினத்தைபாரதம், உலகத்திற்குஅளித்தமிகப்பெரியபரிசு. ஆகவேஉ லக மாந்தர்கள்அனைவரும், அன்றுமுதல்இன்றுவரை, என்றும் மனிதகுலம் உயர்வதற்கு கொடுக்கப்பட்டகலை. இந்தயோகம், முனிவர்களால், ரிஷிகளால்தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்ததொகுக்கப்பட்டதைஇன்றுபதஞ்சலிமுனிவரும், திருமூலரும்மிகப்பெரியநிலைகளில், அஷ்டாங்கயோகமாகஉலகத்திற்குகொடுத்திருக்கிறார்கள்.


ஆகவே இந்தயோகமுறைகளை ,முறைப்படியோகஆசிரியர்கள்மூலம், யோக ஆச்சாரியர்களின் மூலம், முறைப்படிஇந்தஉடலைப்பேணிப்பாதுகாப்பது, மனதை அமைதிப்படுத்திக் கொள்வது, எதிலும்அறிவோடுஇருத்தல். ஏனென்றால்இதுஅறிவுஉலகம். இந்தஅறிவுஉலகத்தில்யாரிடமும்நாம்ஏன்ஏமாறக்கூடாது. நம்பிக்கை: அறிவு விளக்கத்தோடு கூடியநம்பிக்கைநமக்குவேண்டும். ஆகவேதான்இந்தயோகம்உடல்நிலை, மனநிலை, அறிவுநிலை என்றமூன்றுநிலையும்ஒருங்கிணைந்து, அமைதிநிலைக்குகொண்டுசெல்கிறது. ஆகதனிமனிதஅமைதிமூலம், குடும்பஅமைதி, தேசஅமைதி, உலக அமைதி ஏற்படுகிறது. ஆகவேதான் Yoga for peace.


ஆகவே இந்தஅமைதிமூலம்உலகத்தைஅமைதிஅடையச்செய்வது. உலகநலத்தைக்காப்பது, உலக அமைதிகாப்பதுஎன்றஅற்புதமானநோக்கத்தில்தான், இந்தயோகக்கலை, பாரதத்திலே தோற்றுவிக்கப்பட்டது. இதுசமயசார்பற்றது. இதுமனிதகுலத்திற்காக, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒருஅற்புதமானகலை. இதுதான்அழியாக்கலை, சாகாக்கலை. இந்தகலையின் மூலம், மனிதகுலம்அனைத்தும்நலமோடும், வளமோடும், மகிழ்வோடும், நிறைவோடு வாழபரிபூரணநல்லாசிகள்.


ஆகுக ,ஆக்குக! யோகிஆகுக! அனைவரையும்யோகியர்கள்ஆக்குக!


எல்லோரும்எல்லாம்பெற்றுஇன்புற்றுவாழ, வையகம்சாந்தியும், சமாதானமும், சந்தோஷமும் அடைய, பரிபூரணநல்லாசிகள்!


வளர்க மெய்ஞ்ஞானம்! வாழ்கசமாதானம்! இறைஅருளால்சத்தியயுகம்காப்போம்!


உலகநலம்காப்போம்! உலகஅமைதிகாப்போம்!


அன்னைபூமிநீடூழிவாழ்க! பிரபஞ்சம்நீடூழிவாழ்க!


இந்த சர்வதேச யோகதினத்திலே, உலகம்முழுவதும், இந்தயோகத்தைப்பயிலுகின்ற, பயிற்றுவிக்கின்ற அனைவருக்கும், அனைத்துதேசத்திற்கும், பரிபூரணநல்லாசிகள். இந்தகொரோனாஎன்றதொற்றுநோயிலிருந்துமனிதகுலம்நீங்கி, உலகம்முழுவதும்இயல்பான, இயற்கையானவாழ்வைப்பெற, பரிபூரணநல்லாசிகள்.


சந்தோஷம்! சந்தோஷம்! சந்தோஷம்!
https://youtu.be/zu0myu77Ems


- தினமலர் வாசகர் சொற்சித்தர்
Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம்

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம்...

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி...

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்...

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us