செய்திகள்

நொய்டா கோயிலில் அனுஷ நட்சத்திர பூஜை ஓராண்டு நிறைவு

ஆகஸ்ட் 14,2021 

    நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் பக்தர்கள் நலனுக்காக மாதந்தோறும் அனுஷ நட்சத்திரத்தன்று அனுஷ நட்சத்திர பூஜை நடத்துவதென்று வேத பிரசார சன்ஸ்தான் குழுவினர் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவெடுத்து அப்போது முதல் இந்த பூஜையை நடத்தி வருகின்றனர். இந்த பூஜை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.இந்த பூஜையை ஸ்ரீராம் வாத்தியார், சங்கர் வாத்தியார் மற்றும் மணிகண்டன் நடத்தினர், இதில் ஏராளமான் பக்தர்கள் கலந்து கொண்டனர், 


இந்த பூஜையின்போது காஞ்சி பரமாச்சார்யாவின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மலர்களும் வில்வம் இலைகளும் படத்தின் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடியிருந்த பக்தர்கள், ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா என்று முழங்கினர். தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த அனுஷ நட்சத்திர பூஜையில்  வேத பிரசார சன்ஸ்தான் மூத்த  உறுப்பினர்களான   வி.வேதமூர்த்தி, எஸ்.வெங்கடேஷ், எஸ்.ராதாகிருஷ்ணன்,  கே.ராஜேந்திரன், எஸ்.சோமசுந்தரம், நீலா ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்..



மாதந்தோறும் வரும் இந்த அனுஷ நட்சத்திரத்தன்று பரமாச்சார்யாவின் படத்திற்கு பரமாச்சார்யாவின் பக்தர்கள் பூஜை செய்கின்றனர். இந்த பூஜையின் மூலம் தங்களுக்கு மன அமைதி கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர், 


கொரோனா சமயத்தில் கூட பக்தர்கள் முகவசம் அணிந்து இந்த பூஜையில் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக சானிடைசர், சோப் போன்றவற்றை கோயில் நிர்வாகம் வைத்திருந்தது.


சகஜநிலை எற்பட்டதும் மேலும் கூடுதலாக பக்தர்கள் கோயிலுக்கு வந்து இந்தபூஜையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடு நிலவிய காலத்திலும் பக்தர்கள் நலனுக்காக நித்ய பூஜை புனஸ்காரங்களை வேத பிரசார சன்ஸ்தான் செய்து வந்தது. வாராந்திர பாராயணம் ஆன்லைனில் நடத்தப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்படவர்கள் மற்றும் மற்றவர்கள் நலனுக்காக வீட்டிலிருந்தே பிரார்த்தனை செய்யுமாறு பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது. 


தென் இந்தியர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வேத பிரசார சன்ஸதான, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. நொய்டாவில் உள்ள பழமையான தென் இந்திய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் ( செக்டர் 22) மற்றும் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில உருவாகி வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயில்களை இந்த அமைப்புதான் நிர்வகித்து வருகிறது.





- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்












Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா...

கிழக்கு டில்லி. வசுந்தரா என்க்ளேவ், தர்ம சாஸ்தா சேவா சமிதி புதிய நிர்வாகக் குழு

கிழக்கு டில்லி. வசுந்தரா என்க்ளேவ், தர்ம சாஸ்தா சேவா சமிதி புதிய நிர்வாகக் குழு...

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத் சார்பில் சுதந்திர தின பவள விழா

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத் சார்பில் சுதந்திர தின பவள விழா...

மும்பை தாராவி கிளை ஆல் இந்தியா தவ்ஹீத்ஜமாஅத் சார்பாக இரத்ததான முகாம்

மும்பை தாராவி கிளை ஆல் இந்தியா தவ்ஹீத்ஜமாஅத் சார்பாக இரத்ததான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us