செய்திகள்

தெலுங்கானா தமிழ்ச் சங்க இணையவழி தமிழ் வகுப்புகள் தொடக்க விழா

ஜூலை 16,2021 

ஐதராபாத்: தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இணையவழி தமிழ் வகுப்புகள் தொடக்க விழா நேற்று (15/07/2021) மாலை 5 மணியளவில் இணைய வழியில் (கூகுள் மீட் செயலி வாயிலாக) மிகச் சிறப்பாக நடைபெற்றது. செல்வி மாதங்கி, செல்வன். சுரேஷ் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். தொடர்ந்து தெலுங்கானா தமிழ்ச் சங்க தலைவர் போஸ் சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.ஐதராபாத் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சி மையம், சித்தாந்த வித்யா நிதி பேராசிரியர் கோ.முத்துசுவாமி, (கவிஞர் சின்மய சுந்தரன்), ஐதராபாத் நிறை இலக்கிய வட்டம், பட்டிமன்ற பேச்சாளர், தலைவர் ஸ்ரீனிவாசன், திருவையாறு ஔவை கோட்டம் மற்றும் தமிழ் ஐயா கல்வி கழக தலைவர் முனைவர் திரு. கலைவேந்தன், கோவை வசந்த வாசல் கவிமன்ற செயலாளர் கோவை கோகுலன், அகமதாபாத் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் வாலறிவன், தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினர் தமிழ் ஐயா திரு. முத்து கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தெலுங்கானா தமிழ்ச் சங்க தமிழ் வகுப்பு ஆசிரியர் மற்றும் பேச்சாளர் ஜெய மணிகண்டன் ஏற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்ச் சங்க நிறுவன உறுப்பினர் யுவராஜ் நன்றியுரையாற்றினார். முன்னதாக நிகழ்ச்சியை திருமதி அருணா குமாரராஜன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் தருமசீலன், ராஜ்குமார், நேரு சாஸ்திரி, குணசேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மொழி நமது அடையாளம்! தாய்மொழி கற்பதும் காப்பதும் நமது கடமை!! தமிழை நேசிப்போம்! தமிழால் உயர்வோம்!! என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி...

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்...

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி...

நொய்டா கோயிலில் ஆவணி அவிட்டம்

நொய்டா கோயிலில் ஆவணி அவிட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us