செய்திகள்

நொய்டா கோவில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 14,2021 

 நொய்டா செக்டர் 22 ல் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் மற்றும் செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்பட்டது. 30 ஆண்டிற்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேத பிரச்சார சன்ஸ்தான் இந்த இரு கோயில்களையும் நிர்வகித்து வருகிறது.ஸ்ரீ வரசித்திவிநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகத்துடன் காலைபூஜை தொடங்கியது. மகா தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெற்றதும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ விநாயகப் பெருமான் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு காட்சி அளித்தார்.



செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலிலும் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்பட்டது. ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


நொய்டா பகுதியில் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோயில்களுக்கு வந்து விநாயகப்பெருமான் அருள் பெற்றனர். கனமழையையும் பொருட்படுத்தாமல் கோயில்களுக்கு வந்து அபிேஷகம் செய்த ஜெகதீசன் குருக்கள், மணிகண்டன் சர்மா வாத்தியார் ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.


திரவிய பொடி, மாவுப் பொடி, மஞ்சள், பஞ்சாம்ருதம், பால், தயிர், தேன், நெய், பழச்சாறு, விபூதி மற்றும் சந்தனத்தால் அபிேஷகம் செய்யப்பட்டது. ஸ்ரீ விநாயகப்பெருமான் அருகம்புல் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.


நொய்டா மட்டுமல்லாது, இந்திரபிரஸ்தம், வைசாலி, காஜியாபாத் பகுதிகளிலுமிருந்து வந்திருந்த பக்தர்கள் ஸ்ரீ கார்த்திகேயரின் அருளையும் பெற்றனர்.


பக்தர்கள் முகக்கவசம் அறிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தனர். கோயில் வாயிலில் சோப், சானிடைசர் வைக்கப்பட்டிருந்தன.


நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் நொய்டாவில் உள்ள பழமையான தென் இந்திய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் ( செக்டர் 22) மற்றும் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில உருவாகி வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயில்களை நிர்வகித்து வருகிறது.


கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மக்கள் நலனுககாக வீட்டில் இருந்தவாறே பிரார்த்தனையும் பாராயணமும் செய்யுமாறு பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது. 2020 மார்ச் முதல் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமமும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீ விஷணு சகஸரநாமம், ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் ஆகிய குழு பாராயணம் ஆன்லைன் மூலம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்



Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

சாகித்ய விருது பெற்ற தமிழ் எழுத்தாளருக்கு தில்லி தமிழ் சங்கம் பாராட்டு விழா

சாகித்ய விருது பெற்ற தமிழ் எழுத்தாளருக்கு தில்லி தமிழ் சங்கம் பாராட்டு விழா...

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா...

கிழக்கு டில்லி. வசுந்தரா என்க்ளேவ், தர்ம சாஸ்தா சேவா சமிதி புதிய நிர்வாகக் குழு

கிழக்கு டில்லி. வசுந்தரா என்க்ளேவ், தர்ம சாஸ்தா சேவா சமிதி புதிய நிர்வாகக் குழு...

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத் சார்பில் சுதந்திர தின பவள விழா

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத் சார்பில் சுதந்திர தின பவள விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us