செய்திகள்

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத் சார்பில் சுதந்திர தின பவள விழா

ஆகஸ்ட் 22,2021 

 இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத், சார்பில்  குக்கட்பள்ளியில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் விழா அரங்கில்  ஆகஸ்ட் 15, 2021 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.ஐதராபாத்தில் வாழும் தமிழன்பர்கள் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவிற்குத் தலைமை தாங்கி பேசிய தெலுங்கானா தமிழ் சங்கத் தலைவர் திரு எம்.கே.போஸ் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் குழுமியிருந்த பார்வையாளர்கள் கொரோனோ விதிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதையும் பாராட்டினார்.நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக தமிழ்ச் சங்கத்தின் மூலம் நடைபெற்று வருகிற தமிழ் வகுப்பு மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளை தமிழ் வகுப்பு ஆசிரியர் திருமதி ஜெயலட்சுமி மணிகண்டன் மற்றும் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி நிர்மலா ரவி அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பங்கேற்று நம் நாட்டின் சுதந்திரத் தியாகிகளை, குறிப்பாக கொடிகாத்த குமரனைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அவர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் விழாவைச் சிறப்பித்தனர்.


மேலும் சிறப்பு பேச்சாளர்கள் சுதந்திரத்திற்குப் பின் நம் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். பாலாஜி என்பவர் தன் உரையில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சில எளிய வழி முறைகள் குறித்து பேசினார். தொடர்ந்து கோபால கிருஷ்ணன் அவர்கள் ஒற்றுமையை குறித்து பேசினார். இந்த விழாவில் கடந்த மார்ச் மாதம் தமிழ் சங்கம் நடத்திய ‘உலக மகளிர் தின’ விழாவின் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த சுதந்திர தின வைரவிழாவிலும் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பலர் பரிசுகளை அள்ளிச்சென்றனர்.


சங்க நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்த தி சென்னை சில்க்ஸ் நிர்வாகி மற்றும் ஊழியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை திருமதி செல்வி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.


முடிவில் தமிழ்ச் சங்கத்தின் துணைக் செயலாளர் குணசேகரன் தன் நன்றியுரையில் விழா சிறப்பாக நடந்தேற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி, விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப் பெற்று இனிதே நிறைவுற்றது.


முன்னதாக விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள் தருமசீலன், யுவராஜ், ராஜ்குமார், நேரு, குமாராராஜன், தட்சிணாமூர்த்தி, ராஜன்முத்துசுவாமி, வேல்முருகன், செல்வகுமரன், சாந்தகுமார், சரவணன், உமாகணேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி...

பாராட்டு விழா

பாராட்டு விழா...

மூன்றாம் ஆண்டாக 'முருக கோஷம்'

மூன்றாம் ஆண்டாக 'முருக கோஷம்'...

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பஜனை

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பஜனை...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us