செய்திகள்

நொய்டா கோயிலில் ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 23,2021 

 ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நொய்டா செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ கார்த்திகேயப் பெருமான் கோயிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வந்து, பூணூல் மாற்றிக் கொண்டனர். இந்த ஆண்டு ஆவணி அவிட்ட நிகழ்வை வாத்தியார் சங்கர் சுப்பிரமணியம் நடத்தி வைத்தார். இடியுடன் கூடிய கனமழை பெய்தபோதும் பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து நிகழ்வில் பங்கேற்றனர்.வேதத்தின் முக்கியத்துவும் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிஏ சுப்ரமணியம் உரையாற்றினார். ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீ கார்த்திகேயப் பெருமானுக்கும் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.



கொரானோ கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் சந்திப்பிற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 105 பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டனர்.


கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு மூத்த உறுப்பினர் ராஜு ஐயர் நன்றி தெரிவித்தார். மேலும் நொய்டா நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 1000 சதுர மீட்டர் பரப்பில் கோயில் கட்டுமானப்பணி வேகமாக நடைபெறுவது குறித்தும் விளக்கினார்,


ஆன் லைன் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன், ஏ பாலாஜி, ராம ேஷசன், ராஜு ஐயர் சிறப்பாக செய்திருந்தனர். மகா தீபாராதனையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


- நமது செய்தியளர் எஸ்.வெங்கடேஷ்











Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு...

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா...

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி...

பாராட்டு விழா

பாராட்டு விழா...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us