செய்திகள்

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 25,2021 

நொய்டா செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயில் மற்றும் செக்டர் 22 ல் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் ஆகியவற்றில் ஸ்ரீ மகா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்த இரு கோயில்களும் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேத பிரச்சார சன்ஸ்தானால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் ஸ்ரீ மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிேஷகமும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு, பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.செக்டர் 22 ல் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மாலையில் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.


எண்ணெய், திரவியப்பொடி, மாப் பொடி, மஞ்சள், பஞ்சாமுர்தம், பால், தயிர், தேன், நெய், ஆரஞ்சு மற்றும் கரும்புச்சாறு, விபூதி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. ஸ்ரீ விநாயகப் பெருமான் அருகம்புல் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.


நொய்டா மட்டுமல்லாமல் டில்லி, இந்திரபிரஸ்தம், வைசாலி, காஸியாபாத் பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் வந்து ஸ்ரீ விநாயகப்பெருமான் அருள் பெற்றனர். ஜெகதீசன் குருக்கள், மணிகண்டன் சர்மா வாத்தியார் அபிேஷகம் செய்தனர்.


இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவின் பத்திரிகையை விநாயகப் பெருமான் பாதத்தில் கோயில் நிர்வாகத்தினர் வைத்து வழிபட்டனர்.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு...

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா...

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி...

பாராட்டு விழா

பாராட்டு விழா...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us