செய்திகள்

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்

ஆகஸ்ட் 29,2021 

 சஷ்டியை முன்னிட்டு நொய்டா செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ கார்த்திகேயப் பெருமான் கோயிலில் ஸ்ரீ கார்த்திகேயப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. காலை நிகழ்வுகள் மகா தீபாராதனையுடன் நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு சர்க்கரைப் பொஙகலும் பஞ்சாமுர்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
திரவிய பொடி, மாவுப் பொடி, மஞ்சள், பஞ்சாம்ருதம், பால், தயிர், தேன், நெய், பழச்சாறு, விபூதி மற்றும் சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ விநாயகப்பெருமான் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 'வெற்றிவேல் முருகனுக்கு ஹரோ ஹரா' என்று பக்தர்கள் முழங்கினர். ஸ்கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. முருகப் பக்தி பாடல்களையும் பாடினர்.


நொய்டா மட்டுமல்லாமல் டில்லி, இந்திரபிரஸ்தம், வைசாலி, காஸியாபாத் பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் வந்து ஸ்ரீ விநாயகப்பெருமான் அருள் பெற்றனர்.மணிகண்டன் சர்மா வாத்தியார் அபிஷேகம் செய்தார்.
முருகனின் மகிமை !
ஆந்திராவில் வசிக்கும் இளம் தம்பதியினர், சமீபத்தில் நொய்டாவில் செக்டர் 52ல் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், நமது 62 கோவிலை தேடி, முருகன் அருள் புரிவார் என நம்பி வந்துள்ளார் . கோவில் மணிகண்டன் வாத்யாரிடம் தனது கவலைகளை கூறியுள்ளார். எல்லா சஷ்டி நாட்களிலும் இக்கோவிலுக்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்யவும், மற்றும் விளக்கை ஏற்றவும் என்று கூறியுள்ளார். அதே போல், அந்த தம்பதியினரும் கடந்த சில மாதங்களாக சஷ்டி அன்று இக்கோவிலுக்கு வந்து அபிஷேகமும், விளக்கையும் ஏற்றுகின்றனர் . சஷ்டி அபிஷேகத்திற்கு வரும் பொழுது, முருக கடவுள் தனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருளினார், என்ற நல்ல செயதியை இந்த தம்பதியினர் தெரிவித்தனர் .
தென் இந்தியர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வேத பிரசார சன்ஸதான, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. நொய்டாவில் உள்ள பழமையான தென் இந்திய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் ( செக்டர் 22) மற்றும் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில உருவாகி வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயில்களை இந்த அமைப்புதான் நிர்வகித்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மக்கள் நலனுககாக வீட்டில் இருந்தவாறே பிரார்த்தனையும் பாராயணமும் செய்யுமாறு பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது. 2020 மார்ச் முதல் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமமும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீ விஷணு சகஸரநாமம், ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் ஆகிய குழு பாராயணம் ஆன்லைன் மூலம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கினறனர். பக்தர்கள் வசதிக்காக கோயில் வாயிலில் சோப், சானிடைசர் வைக்கப்பட்டிருந்தன.
- நமது செய்தியாளர் வெங்கடேஷ் 


Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு...

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா...

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி...

பாராட்டு விழா

பாராட்டு விழா...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us