செய்திகள்

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம்

செப்டம்பர் 19,2021 

பரம கருணாமூர்த்தியான ஸ்ரீ சீதாராமபிரானின் க்ருபையால் ஆவணி 28ல் தொடங்கி புரட்டாசி ஐந்தாம் தேதி ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம் நடை பெற்றது. இந்த நிகழ்வை செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில், பக்தர்கள் நலனுக்காக வேத பிரச்சார சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது.இந்த நவாஹ உத்சவம் கிருஷ்ணா ப்ரேமி ஸ்வாமிகளுடைய பிரதான சிஷயரான யக்ஞராம பாகவதரால் நடத்தப்பட்டது. இவர் ஒன்பது தினங்களும் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் மூல பாராயணமும், உபன்யாசமும் நடத்தினார்.


செப்டம்பர் 13 ஆம் தேதி ஸ்ரீ ராம ஜனனத்துடன் தொடங்கிய நிகழ்வில் ஸ்ரீ சீதா கல்யாணம், கெளசல்யா மங்கலசாசனம், பாதுகா பட்ட்பிேஷகம், சுந்தர காண்டம், விபீஷணர் சரணாகதி, ஸ்ரீ ராம பட்டாபிேஷகம், ஸ்ரீ ஷனுமந்த் பிரபாவம் ஆகியன இடம் பெற்றன.இதில் முத்தாய்ப்பான நிகழ்வுகளான சீதா கல்யாண மகோத்சவம், அஷ்டபதி பஜனை 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வை ஒரு தரமான ஆன்மிக நிகழ்வாக, பாகவதரின் விளக்கம் பிரதிபலித்தது.


சீதா கல்யாண தினத்தன்று காலை பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து உஞ்சவிருத்தி இடம் பெற்றது. அயோத்திக்கே போய் வந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டதாக பக்தர்கள் கூறினர்.


வேத பிரச்சார சன்ஸ்தானின் மூத்த உறுப்பினரான ராஜு ஐயர் பேசுகையில், 'ஏ.பாலாஜி, வேதமூர்த்தி, விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், ராமசேஷன், சோமசுந்தரம், ராஜேந்திரன் ஒத்துழைப்பால் இந்த 9 நாள் நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. கலைஞர்களை அறிமுகப்படுத்திய டாக்டர் ராமலிங்கத்திற்கும், பாகவதரும் அவருடைய குழுவினரும் தங்க ஏற்பாடு செய்த கர்னல் சங்கர் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பூஜை ஏற்பாடுகளும் வாத்தியார் சங்கர், வாத்தியார் ஸ்ரீராம் மேற்பா்வையில் மணிகண்டன் சர்மா உதவியுடன் செய்யப்பட்டன' என்றார்.


நொய்டா நிர்வாகம் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பொது நிகழ்வு இது. இருப்பினும் கோவிட் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டன.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை...

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்...

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்...

ஐயப்பன் மண்டல விழா

ஐயப்பன் மண்டல விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us