செய்திகள்

நொய்டா வேத பிரச்சார சனஸ்தான் கோயில்களில் நவராத்திரி ஆரம்பம்

அக்டோபர் 07,2021 

  நொய்டா வேதபிரச்சார சன்ஸ்தான் செக்டர் 62 ல் நிர்வகித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் நான்காவது ஆண்டாக தொடர்ந்து கொலு வைக்கப்பட்டுள்ளது. கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கீழ் தரைத்தளத்தில் இது அமைக்கப்பட்டுளளது.இந்த ஆண்டு கொலுவின் சிறப்பு அம்சமாக சானிடைசர் போன்ற கோவிட் தொடர்பான பொருட்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் வழக்கமான அஷ்டலட்சுமி செட், தசாவதாரம், ஸ்ரீ மகா விஷ்ணு, ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கார்த்திகேயர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ ஹனுமான், கல்யாண செட், விளக்கு பூஜை செட். ஐபிஎல் கிரிக்கெட்டை நினைவு கூரும் கிரிக்கெட் வீரர்கள் பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த கொலுவுக்காக வேத பிரச்சர சன்ஸ்தான இரண்டு முறை கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளது.நவராத்திரி திருவிழாவை ஒட்டி, நாள்தோறும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்படுகிறது. தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வஒங்கப்படுகிறது.


வண்ண மயமான இந்த கொலு ஏற்பாடுகளை ரேணுகா ராமசேஷன், பிரியா ராஜு ஐயர், சுஜாதா கோபால், மைதிலி ராமன், நீலா ராஜேந்திரன், ஜானகி, விஜயா மோகன், புவனா ராதாகிருஷ்ணன், லட்சுமி ரவி ஆகியார் செய்திருந்தனர். கொலுவின் போது பெண்களும் குழந்தைகளும் தேவி கீர்த்தனைகளைப் பாடினர்.


இணையதள ஈடுபாடு போன்ற காரணங்களாலும், பலர் சிறிய பிளாட்களில் வசிப்பதால் போதி இட வசதி இல்லாத காரணத்தாலும் தென் இந்திய கலாச்சார பாரம்பரியத்தில் ஒரு அங்கமான கொலுவுக்கு தற்போதைய இளைய தலைமுறையினரிடம் ஆர்வம் குறைந்து வருகிறது; கொலு வைக்கும் வழக்கமும் மறைந்து வருகிறது. இதனால் இப்படி கோயில்களில் வைக்கப்படும் கொலு போன்ற நிகழ்வுகளுக்கு தங்கள் குழந்தைகளையும் பெற்றோர் அழைத்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


11 ஆவது ஆண்டாக பிரதோஷம்


கடந்த 11 ஆண்டுகளாக பிரதோஷம் நடைபெற்று வருகிறது.  அக்டோபர் 3 ஆம் தேதி பிரதோஷத்தன்று ஜெகதீசன் குருக்கள் துணையுடன் ஸ்ரீராம் வாத்தியார் சிறப்பு அபி ேஷகம் செய்தார்.


 நமது செய்தியாளர் வெங்கடேஷ்

Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை...

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்...

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்...

ஐயப்பன் மண்டல விழா

ஐயப்பன் மண்டல விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us