செய்திகள்

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

அக்டோபர் 08,2021 

தில்லி தமிழ் சங்கத்தில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. தலைநகர் டிரம்ஸ் சுரேஷின் ஆகாஷ் ஸ்ருதி குழுவினர் அளித்த இசை விருந்தில் உள்ளூர் பாடகர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டு தமிழ் திரை இசையில் பழைய புதிய பாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்தனர். தமிழ் சங்க துணை தலைவர் குருமூர்த்தியும், இணைபொருளாளர் பாலாவும் மாறி மாறி பாட்டிற்கு முன்னோடியாக பல விஷயங்களை தொகுத்தளித்து இசைமாலைக்கு இனிமை கூட்டினார்கள்.
சுரேஷ், ராம்ஜி, சத்யா ஜோசப், ராஜ்ஸ்ரீ நாராயணன், நிகிதா ராமலிங்கம், அக்ஷயா அருண், டோரா மெல்ரோஸ் தங்கள் குரல்வளத்தால் பிரபல பாடகர்களை நம் கண்முன் கொணர்ந்தார் கள். இந்த இசைமாலைக்கு தில்லி துவாரகா ராம் மந்திர் அறங்காவலர் விஸ்வநாதன், அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை பொது செயலாளர் இரா.முகுந்தன் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள்.


தமிழ் சங்கம் சார்பில் கலைஞர்கள் கெளரவிக்க பட்டார்கள். சங்க இணை செயலாளர் ஜோதி பெருமாள் நன்றியுரை நவில விழா இனிது முடிந்தது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்...

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்...

ஞானத் தமிழகம் மலர சூளுரைப்போம்: மகரிஷி பரஞ்சோதியார் அருளுரை

ஞானத் தமிழகம் மலர சூளுரைப்போம்: மகரிஷி பரஞ்சோதியார் அருளுரை...

தென்கயிலையில் தோன்றும் ஒளியால் உலகம் முழுவதும் அமைதி: மகரிஷி பரஞ்ஜோதியார்

தென்கயிலையில் தோன்றும் ஒளியால் உலகம் முழுவதும் அமைதி: மகரிஷி பரஞ்ஜோதியார்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us