செய்திகள்

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா

அக்டோபர் 18,2021 

இவ்வுலக உயிர்களை கடும் வெப்பம் மற்றும கடும் குளிர் இவற்றினால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்து அருள் பாலிப்பவள் அன்னை பராசக்தி. அனைத்து உயிர்களினுள்ளும் கொலு வீற்றிருந்து அருள் பாலிப்பவள் அன்னை பராசக்தி. தங்களை காத்து ஆட் கொண்ட அன்னைக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு சிறப்பு செய்ப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை துவங்கி அக்டோபர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை தென்கயிலை திருமூர்த்திமலையில் அமைந்துள்ள தத்துவ உயர்ஞான பீடமான உலக சமாதான ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெறறது. சிறப்பு மிக்க இந்நிகழ்வை ஸ்ரீ பரங்ஜோதி யோகா கல்லூரியும் உலக சமாதான ஆலயமும் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தின.அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ராத்திரிக்கும் உண்டான அன்னையின் வேஷம் தரித்து அன்னையின் சிறப்புகளை ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர். தினசரி பூஜை முடிந்த பிறகு வழங்கப்படும் பிரசாதத்தின் பலன், அந்த பிரசாதத்தினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன இந்த காலகட்டத்தில் அதன் அவசியம் குறித்து எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு மாணவி ரூபா அறிவியல் பூர்வமாகவும் , உடல் நலப் பூர்வமாகவும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.


இதில் ஆலயத்தைச் சேர்ந்த பெண் மெய்யுணர்வாளர்கள், பெண் குழந்தைகள் மற்றும் ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி மாணவிகள் தெய்வீகத்தை வெளிப்படுத்தும் வகையில் துர்கை, மகாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவிகளாக அலங்கரித்துக் கொண்டு தெய்வ அம்சத்தை வெளிப்படுத்தினர்.


நவராத்திரி தினசரி அவதாரங்களின் நோக்கம், அதன் வெளிப்பாடு, அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் குறித்து மிக எளிமையாகவும் , அதே சமயத்தில் இன்றைய சமுதாயத்தினர் நமது பாரம்பரியத்தைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவையின் அவசியத்தைக் குறித்தும் குருமகான் எடுத்துரைத்தார்.


குண்டலினி எனும் மகாசக்தியே துர்கை வடிவில் உடல் வலிமை அளிப்பவளாகவும், மகாலக்ஷ்மி வடிவில் பொருளாதாரம் அளிப்பவளாகவும், சரஸ்வதி வடிவில் ஞானம் வழங்குபவளாக, கல்வி அளிப்பவளாகவும் இருப்பதாக குருமகான் கூறினார். இதை முன்வைத்து முதல் மூன்று நாட்கள் மூல தவமும், அடுத்த மூன்று நாட்கள் மார்பு மைய தவமும், நிறைவு மூன்று நாட்கள் ஆக்கினை தவமும் குருமகானின் வழிநடத்தலில் இயற்றப்பட்டது.


நிறைவு நாளான விஜயதசமி அன்று மகளிர் மெய்யுணர்வாளர்கள் மற்றும் ஸ்ரீ பரஞ்ஜோதி கல்லூரி மாணவிகள் அனைவரும் அஷ்டலக்ஷ்மிகளாவும், சாமுண்டீஸ்வரிகளாகவும், அர்த்தநாரீஸ்வரர்களாகவும், கிருஷ்ணன் மற்றும் ராதை உருவங்களில் தங்களை அலங்கரித்து இறையம்சத்தை வெளிப்படுத்தினர், அவர்கள் அனைவரையும் குருமகான் வாழ்த்தி நல்லருளாசி வழங்கினார்.


ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரியின் பேராசிரியை மெய்ஞானச் செல்வி இளமதி தினசரி நிகழ்வுகளைத் தொகுத்தளித்தார். மெய்ஞானாசிரியை உமாராணியம்மா நவராத்திரி விழா நிகழ்விற்குண்டான செயல்களை குருமகான் நல்லாசியுடன் செய்தார்.


உலக சமாதான அறக்கட்டளையின் அறங்காவலர்கள், குருமாதா, மெய்ஞானாசிரியர் பொன்னுசாமி ஆகியோரும் ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரியின் தாளாளர் மெய்த்திரு செங்குட்டுவன், பெருளாளர் செய்ஞானாசிரியர் செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினர்.


அன்னையின் அவதாரமாக வேடமணிந்த மாணவிகள் அன்னையின் தன்மைகளை உணர்ந்ததாகவும், நவராத்திரியின் பெருமைகளையும், அவசியத்தையும் உணர்ந்ததாகவும் தெரிவித்தனர்.


உலக சமாதான அறக்கட்டளையும், ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரியும் சிறப்பு மிக்க நிகழ்வை சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர்.


- தினமலர் வாசகர் சொற்கோ

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஐயப்பன் மண்டல விழா

ஐயப்பன் மண்டல விழா...

தில்லி தமிழ் சங்கத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சி

தில்லி தமிழ் சங்கத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சி...

கிழக்கு டில்லி ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில் ருத்ராபி ேஷகம்

கிழக்கு டில்லி ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில் ருத்ராபி ேஷகம்...

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us