செய்திகள்

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு

அக்டோபர் 19,2021 

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஜெகத்குரு ஸ்ரீசங்கர வீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசியுடன், புதுடில்லி, ஆர்.கே.புரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாச்சார மையத்தில் அகடோபர் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு பெற்றது. நிறைவு நாளன்று சண்டி ேஹாமம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு காமகோடி டிவியிலும் சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய்பட்டிருந்தது.மகோத்சவத்தின்போது என்.பூர்ணிமா, டாக்டர் பிரசாந்த் கோபிநாத் பாய், கீர்த்தி உண்ணி, அனகா, எம்.ஆர்.ராமசாமி, டாக்டர் எல்.ஸ்ருதி, ஷியாமளா பாஸ்கர், ஆர்.ஸ்ரீதர், ஆகியோருடைய வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகளின் கச்சேரி நடைபெற்றது. விஎஸ்எஸ் பஜனை மண்டலி வி.விஸ்வநாதன் குழுவினரின் நாமசங்கீரத்தனம், வேதம் சந்திரசேகர் குழுவினரின் வேத கோஷம் ஆகியவையும் இடம் பெற்றன. அனைத்து நாட்களிலும் மாலையில் தேவி பாகவத உபன்யாசத்தை பி.ஆர். கண்ணன் நிகழ்த்தினார். மயூர்விஹார் செக்டர் 1 ஐச் சேர்ந்த மகளிர் குழுவனர் கோலாட்டம் மற்றும் கலாச்சார நடனம் ஆடினர். பூஜை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய கொலு பக்தர்களைக் கவர்ந்தது உலக அமைதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மகோத்சவத்தின் அனைத்து நாட்களிலும் பல்வேறு ேஹாமங்கள், விசேஷ பூஜைகள், பாராயணங்களை நடத்தப்பட்டன. விளக்கு பூஜையிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


மகோத்சவத்தில் பங்கேற்ற கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர். கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்த டில்லி குருகுலம் அறக்கட்டளை, காயத்திரி நுண்கலை மையம் ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்...

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்...

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்...

ஞானத் தமிழகம் மலர சூளுரைப்போம்: மகரிஷி பரஞ்சோதியார் அருளுரை

ஞானத் தமிழகம் மலர சூளுரைப்போம்: மகரிஷி பரஞ்சோதியார் அருளுரை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us