செய்திகள்

கந்த சஷ்டி முன்னிட்டு ஆறு நாளும் நொய்டா கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம்

நவம்பர் 12,2021 

  நொய்டா செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர்கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகேயப் பெருமானுக்கு 6 நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கந்த சஷ்டி நாளான நவம்பர் 10 ஆம் தேதியன்று ஸ்ரீ கார்த்திகேயப் பெருமான் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, முருகனின் மறு பெயர் அழகு போன்ற பக்தி பாடல்களை பக்தர்கள் பாடினர். கோயில் வளாகத்தில் காவடிகள் எடுக்கப்பட்டன. ஆறுபடை கோயில்களில் செய்யப்படுவதைப் போன்று அலங்காரங்களும் சிறப்பு அபிஷேகங்களும் இருந்ததாக பக்தர்கள் பாராட்டினர். 


திரவியப்பொடி, மாவுப்பொடி, மஞ்சள், பஞ்சாமுர்தம், பால், தயிர், தேன், பழச்சாறு, நெய், விபூதி மற்றும் சந்தனத்தால் சிறப்பு அபிஷேகங.கள் செய்யப்பட்டன. கோயில் வாத்தியார் மணிகண்டன் ஒவ்வொரு நாளும் செய்திருந்த அலங்காரங்களை பக்தர்கள் வெகுவாக பாராட்டினர். 
கோயில் நிர்வாகம் செய்திருந்த மற்றொரு சிறப்பம்சம் திருப்புகழ் பஜனை. விஎஸ்எஸ் பஜனை மண்டலி மகளிர் குழுவால் 7 ஆம் தேதி காலை இந்த பஜனை நடத்தப்பட்டது. இந்த பஜனையில் ஈடுபட்ட ராஜேஸ்வரி கண்ணன், உஷா காசி விஸ்வநாதன், லதா வெங்கட்ராமன், அகிலா சுந்தரம், புவனா ராதாகிருஷ்ணன், காயத்ரி சுவாமிநாதன், வித்யா சங்கரன், புவனா விஸ்வநாதன், காயத்ரி விஸ்வநாதன் ஆகியோரை விழாக் குழுவினர் கவுரவித்தனர். மேலும் இந்த திருப்புகழ் பஜனை திருமுருக கிருபானந்த வாரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த பஜனை நிகழ்வை வேத பிரச்சார சன்ஸ்தான் மூத்த உறுப்பினர் பாகவதர் வி.விஸ்வநாதன் ஒருங்கிணைத்தார். பஜனையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம நன்றி தெரிவித்தது.

- நமது செய்தியாளர் எஸ்வெங்கடேஷ்










Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

சத்குருவின் பொங்கல் வாழ்த்து

சத்குருவின் பொங்கல் வாழ்த்து...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us