செய்திகள்

ஞானத் தமிழகம் மலர சூளுரைப்போம்: மகரிஷி பரஞ்சோதியார் அருளுரை

நவம்பர் 16,2021 

'விரைவில் தமிழகத்தை கல்வி சிறந்த மாநிலமாக - ஞானத் தமிழகமாக மாற்ற வேண்டும்' என ஞான பீடாதிபதி ஜகத்குரு குரு மகான் பரஞ்ஜோதி யார் அருளுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை தென்கயிலை தத்துவ தவ ஞான பீடத்தில் 16.11.2021 காலை நடைபெற்ற ஞான உதய தின விழாவில் அவர் மேலும் உரையாற்றுகையில் ' யார் ஒருவருக்கு எந்தப் பசி இருக்கிறதோ அந்தப் பசியை- வேட்கையை நிறைவேற்ற குரு காத்துக் கொண்டு இருக்கிறார். கலைப் பசி உள்ளவருக்கு கலை ஞானி வந்து சேருவார். அறிவியல் பசி - விஞ்ஞானப் பசி கொண்டோருக்கு விஞ்ஞானி கண்முன் தோன்றுவார்.ஆன்மப் பசி கொண்டோர் ஆன்ம ஞானியால் வழி நடத்தப்படுவார்.சீடனுக்கு குரு எண்ணத்தின் அடிப்படையில் அமைந்து அருள் புரிவார்.சீடன் வேட்கையோடு இருந்தால் குரு ஏதாவது ஒரு வகையில் தோன்றி வழி காட்டுவார்.


'11.11 - இல் ஜெகத் மகா குரு - தத்துவ தவ ஞானி ஞானவள்ளல் பரஞ்ஜோதிப் பெருமானுக்கு ஏற்பட்ட உள் உணர்வு அவருக்குள் ஒரு மாற்றத்தைத் தோற்றுவித்தது.அந்த மாற்றம் ஞானமாக உருவெடுத்தது.ஞானம் கிடைக்கப் பெற்று சமாதானம் பெற்றார்.அது உலக சமாதானமாக மலர்ந்தது. விரைவில் தமிழகத்தை கல்வி சிறந்த மாநிலமாக - ஞானத் தமிழகமாக மாற்ற வேண்டும்' என குறிப்பிட்டார்.
விழா ஒரு நிமிட அமைதியோடு தொடங்கியது.தொடர்ந்து குரு கீதம் - ஞான கீதம் இசைக்கப்பட்டது. பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தர ராமன் வரவேற்பு உரை ஆற்றினார். விழாவில், சிங்கப்பூர் உலக சமாதான அறக் கட்டளைத் தலைவர் லட்சுமண தாஸ் , மலேசியாத் தலைவர் முனைவர் சந்திரன் வீரமுத்து, ஐரோப்பா தலைவர் ஜெயப்பிரகாஷ் முதலியோர் உரை ஆற்றினர்.
விழாவில் புதுச்சேரி ஆச்சார்ய கல்வி நிலைய அன்பர்களுக்கு குரு மகான் ஜீவ ரக்ஷா பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கினார். கல்வி நிலையத் தலைவர் டாக்டர் அரவிந்த் குமாருக்கு ஆலயப் பொருளாளர் கே.பொன்னுசாமி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பயிற்சியாளர்களுக்கு குரு மகான் சான்றிதழ் அளித்துச் சிறப்பித்தார். ஆச்சார்ய கல்வி நிலையச் செயலாளர் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
- தினமலர் வாசகர் அம்மையப்பன்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us