செய்திகள்

கிழக்கு டில்லி ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில் ருத்ராபி ேஷகம்

நவம்பர் 29,2021 

 கிழக்கு டில்லி வசுந்தர என்களேவ் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயில் வளாகத்தில் ஏகதச ருத்ராபி ேஷகம் நடைபெற்றது.இந்த கோயிலை நிர்வகித்து வரும் வசுந்தரா என்க்ளேவ் சர்வேஸ்வர சமாஜம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது ஸ்ரீ சங்கடஹர கணபதி பெருமானுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது.வேதம் சந்திரசேகர் குழுவினரால் ருத்ரஜபம் நடத்தப்பட்டது. 40க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள அனைவரையும் கோயில் நிர்வாகத்தினர் கவுரவித்தனர்.


பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வசுந்தரா என்க்ளேவ் சர்வேஸ்வர சமாஜம், ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலை நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் மூலவர் ஸ்ரீ சங்கடஹர கணபதி நீங்கலாக, ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ ஐயப்பன்,ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ( சிவன் பார்வதி) ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளன.மேலும் ஸ்ரீ நர்த்தன கணபதி, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ மகா விஷ்ணு, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்கை உள்ளிட்ட கோஷ்ட தேவதைகளும்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த கோயிலில் மதம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக 200 பேர அமரத்தக்க இரண்டு அரங்குகள் உள்ளன. கோயில் ஊழியர்கள் குடியிருப்புகளும் உள்ளன.


ஸ்ரீ சங்கடஹர கணபதி 450 கிலோ எடையுள்ள கிராவைன் கல்லில் செதுக்கப்பட்டடு. வட இந்தியாவில் இதுதான் மிக உயரமான அதிக எடையுள்ள விக்ரம். ஸ்ரீசஙகடஹர சதுர்த்தி நாட்கள், பிரதோஷ பூஜைகள், சமஷ்டி நவக்கிரக ேஹாமங்கள் ஆகிய நாட்களில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிேஷகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு இதர நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஞாயிற்றுக்கிழமை தோறும் 300க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

சத்குருவின் பொங்கல் வாழ்த்து

சத்குருவின் பொங்கல் வாழ்த்து...

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us