செய்திகள்

தில்லி தமிழ் சங்கத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சி

டிசம்பர் 01,2021 

கர்நாடக இசையும் திரைஇசையும் என்ற தலைப்பில் தில்லி தமிழ் சங்கம் கலைமாமணி சங்கீத ரத்னா மதுரை ஜி எஸ் மணி அவர்களின் அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை மிகச்சிறப்பாக சரியான விளக்கங்களுடன் பாடிக்காட்டி சங்கீத நுணுக்கங்கள் விளக்கி, தமிழ் திரையுலக இசையமைப்பாளர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை மிக ஜனரஞ்சக மாக வித்வான் ஜி.எஸ் மணி அவர்கள் விளக்கினார்கள்.
அன்றைய தினம் அவர் கல்யாணி ராகத்தில் அமைந்த தியாகராசரின் வாசுதேவயனியை கோடிட்டு காட்டி தொடர்ந்து மன்னவன் வந்தானடி என்ற பிரபல பாடலை பாடிக்காட்டினார்.அடுத்து கானடா ராகத்தில் ஊத்துக்காடின் அலைபாயுதே கண்ணா வை முன்பாடி திரையிசையில் முல்லைமலர் மேலே ஜி ராமநாதனின் பாடலை பாடினார்கள்.அதிலேயே தர்பாரி கானடாவில் அமைந்த மிகப் பிரபலமான மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே அரங்கை அதிரவைத்தது.ஷண்முகப்பிரியாவில் மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்பதில் இசையமைப்பாளரின் கற்பனை வளத்தை ரசிக்கவைத்தார்.மிகக் குறைவாக கையாண்ட


கீரவாணியில் அமைந்த பாட்டுப்பாடவா..நம்மை தாளமிட வைத்தது. தொடர்ந்து பாக்ய ஸ்ரீயில் நிலவே என்னிடம் நெருங்காதே..சிந்து பைரவியில் தில்லானா தில்லானா..பந்துவராளியில் சிவோகம் சிவோகம் என்று ராகங்களின் சாயலில் அமைந்த பல்வேறு பாடல்களை அழகாக பாடி காண்பித்து ரசிக்கவைத்தார்.
அவருக்கு பக்கபலமாக ஹார்மோனியத்தில் முத்துநடேசனும் ,தபலாவில் எஸ்.கணேஷ் அவர்களும் இணைந்து இசைமாலையை அழகுறச் செய்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக தில்லி கர்நாடக சங்கீத சபா செயலர் மகாதேவன்,ஷண்முகாநந்த சபா செயலர் கிருஷ்ணசாமி, அகில இந்திய வானொலியின் உதவி இயக்குநர் வி.முகுந்த் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டி பேசி கலைஞர்களை கெளரவித்தார்கள்.
நிகழ்ச்சி சங்கத்தின் துணைத்தலைவர் குருமூர்த்தி வரவேற்புரையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியை தமிழ் சங்க இணைசெயலாளர் வெங்கடேசன் தொகுத்து வழங்கி நன்றியுரை கூறினார்.
 - நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

சத்குருவின் பொங்கல் வாழ்த்து

சத்குருவின் பொங்கல் வாழ்த்து...

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us