செய்திகள்

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்

டிசம்பர் 06,2021 

“ முதன்முதலில் தமிழில் உள – உடல் – ஆன்ம வளத்திற்கான – பலத்திற்கான அறிவியலை உலகத்திற்கு அறிவித்த ஞானி திருமூலரின் திருமந்திரம் உலகப் பொது மறையாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும்'  என திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பரஞ்ஜோதி நகர் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்ஜோதியார்  சென்னையில் தமிழ்நாடு உடற் கல்விஇயல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான யோகாப் போட்டி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசுகையில், 'கலையாக இருந்த யோகா இன்று தொழில் நுட்பமாக வளர்ந்து – வேலை வாய்ப்புக் கல்வியாக உயர்ந்து – சர்வ தேச அளவில் வர்த்தகமாகவும் உருப்பெற்றிருப்பதற்கு மூல காரணம் திருமூலரே. கல்வி இயல் கற்றவர்கள் கல்வியாளர்களாகின்றனர். மருத்துவ இயல் படிப்பவர்கள் மருத்துவர்களாகின்றனர். யோகக் கலை பயின்றவர்கள் யோகியராக மலருகின்றனர். 'கலை – அறிவியல் – தொழில் நுட்பமாக இன்று யோகக் கலை வளர்ந்து உலகளாவிய நிலையில் பரவியிருக்கிறது .ஐ.நா.சபை அங்கீகாரத்தையும் இன்று யோகாக் கல்வி பெற்றிருக்கிறது. அக்கல்வி மூலம் மனிதனின் நான்கு பரிணாமங்களான உடல் – மனம் – அறிவு – ஆன்மநிலை ஓருங்கிணைந்த கல்வியாக யோகக் கல்வி திகழ்கிறது “. நான்கும் தெரிந்தவனிடம் கேட்டுப் பாருங்கள் என்று சொல்லுகிறார்கள். 


'அந்த நான்கு அறம் – பொருள் – இன்பம் – வீடு என்பதே. இந்த நான்கிற்கான வழிமுறைகளை யோகாக் கல்வி கற்றுத் தருகிறது. கட்டிடத்திற்கு அடிப்படை அஸ்திவாரம். அதன் மேல்தான் மாட மாளிகைகள் எழுப்பப்படுகின்றன. அஸ்திவாரத்தின் ஆழத்தை நேரில் காண முடியுமா ? கடந்து உள்ளே செல்ல வேண்டும் கட உள் – கண்ணுக்குப் புலனாகாத ஒன்று. கடவுளைக் காண ஆலயத்திற்குச் செல்லுகிறோம். ஐந்து பிரகாரம் – ஏழு பிரகாரங்கள் இருக்கின்றன. அன்ன மய கோசம் – பிராண மய கோசம் – மனோ மய கோசம் – விஞ்ஞான மய கோசம் – ஆனந்த மய கோசம். காண இயலாத நுண்பொருள். 


'அதுவே பரம்பொருள். பதஞ்சலி மகரிஷி சமஸ்கிருதத்தில் வடித்தளித்தார். தமிழில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அறிவியலை திருமூலர் உருவாக்கினார். வள்ளற்பெருமான் இராமலிங்க சுவாமிகள் இதனை சாகாக் கலை என்றார் ஆம். மரணமிலாப் பெருவாழ்வு வாழ யோகக் கல்வி வழிவகுக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கொராணா – பெருந்தொற்றுக்கு முடிவு கட்ட ஒரே வழி யோகாதான். மூச்சுப் பயிற்சியே மரபுவழி மருந்து என இன்று உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. 


'மனித வர்க்கத்திடை மனசஞ்சலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் போக்க யோக மருத்துவமே சிறந்தது. யோகா கல்வி பயிலும் மாணவர்களுக்கு உலகளாவிய நிலையில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது' என மகரிஷி குறிப்பிட்டார்.


வெற்றி பெற்றோர் : பல்கலைக்கழகங்களுக்கிடையோன போட்டியில் திருமூர்த்திமலை ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி மாணவர்கள் முதற்பரிசை வென்றனர். பெண்களுக்கான போட்டியில் ஸ்ரீ பரஞ்ஜோதி யோக கல்லூரி மாணவிகள் முதற் பரிசையும் – மாணவர்கள் இரண்டாவது பரிசையும் பெற்றனர். பல்கலைக் கழகங்களுக்கான போட்டியில் செல்வியர் ரூபா ( முதல் ) ஜீவிகா ( இரண்டாவது - பரமேஸ்வரி ( மூன்றாவது ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவர்களுள் லோகேஸ்வரன் மற்றும் பால் பாண்டி ஆகியோர் முதல் – இரண்டாவது நிலை பெற்றனர். 


பரஞ்ஜோதி யோகா கல்லூரி மாணவ – மாணவியரான ரூபா – ஜீவிகா – பரமேஸ்வரி மற்றும் மாணவர்கள் லோகேஸ்வரன் பால்பாண்டி ஆகியோர் ஒடிசாவில் நடைபெறவுள்ள அகில இந்தியப் பல்கலைக் கழகங்களிடையே நடைபெறவுள்ள போட்டிகளில் தகுதி பெற சிறப்புப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


விழா யோகா பிரார்த்தனையுடன் தொடங்கியது. தமிழ் வாழ்த்து தொடர்ந்தது. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர் சி.லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார். மகரிஷி பரஞ்ஜோதியார் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். முனைவர் கண்ணதாசன் மற்றும் துணைப் போராசிரியர் முனைவர் எஸ். செல்வலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர் மகரிஷிக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றனர். முனைவர் வி.துரைசாமி அறிமுக உரையாற்றினார். உலக அமைதித்தூதுவர் மகரிஷி பரஞ்ஜோதியார் போட்டிகளைத் துவக்கி வைத்து உரையாற்றினார்..


- நமது சிங்கப்பூர் செய்தியாளர்  வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us