செய்திகள்

குருமகானின்தீபஒளித்திருநாள் நல்லருளாசிகள்

அக்டோபர் 21,2022 

  அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறையாற்றலான பரிபூரணத்தில் உள்ள பரம்பொருளான பரஞ்சோதியின் பெரும் கருணையினால் தீபஒளி திருநாளில் உலக உயிர்கள் அனைத்தும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று என்றும் நிறைவுடன், மகிழ்வுடன் நிறைவாழ்வு வாழ பரிபூரண நல்லாசிகள் சந்தோசம்.பாரதம் ஒரு வண்ணமயமான கலாச்சாரங்களின் பிறப்பிடம். வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது பாரதம். பாரதத்தின் கலாச்சாரம் ஒவ்வொரு மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையோடு ஒன்றியது; இணைந்தது. எல்லா மக்களும் உணர்ந்த நிலைகளில், ஒன்றுபட்ட நிலைகளில் செயல்படுவதற்கும், உறவுகளையும் நட்புகளையும் பேணுவதற்கும், வளர்ப்பதற்கும் ஒரு காரணியாக பண்டிகைகள் அமைகின்றது.


பண்டிகைகள் ஒவ்வொன்றும் அதற்குரிய கலாச்சார முக்கியத்துவம், பாரம்பரியம் இவற்றை வெளிப்படுத்துகின்றன. பாரத மக்களின் வாழ்வில் இணைந்த ஓர் அங்கமாக பண்டிகைகள் மலர்கின்றன. பண்டிகைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் மலர்ச்சியை கொண்டு வருகின்றன. புதிய உறவுகளையும், நட்புகளையும் பேணிப்பாதுகாக்கவும், வளர்ப்பதற்கும் ஓர் அற்புதமான கருவியாக பண்டிகைகள் அமைகின்றன.


அந்த வகையில் தீபஒளி திருநாள் ஓர் அற்புதமான திருநாளாகும். தீபஒளி திருநாள் தத்துவம் நிறைந்ததாகவும், ஒழுக்க நெறிகளை முன்னெடுத்துச் செல்லும் ஓர் அற்புதத் திருநாளாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. சமுதாயத்தில் ஓர் உயிரோட்டத்தையும், அற்புதத்தையும் கொண்டு செல்வதாக அமைகிறது. தீபாவளி திருநாள் வெறும் ஓர் பண்டிகையாக மட்டுமல்லாமல் வாழ்வை செம்மைப்படுத்தும் ஓர் அற்புதக் காரணியாக அமைகிறது.


தீமை அகன்று நன்மை பயக்கும் ஓர் அற்புதத் திருநாளாக தீபஒளி திருநாள் திகழ்கின்றது. இன்றைய நடைமுறை வாழ்க்கை சூழ்நிலையில் இல்லாத இணக்கத்தையும், நட்பையும், உறவுகளையும் மீண்டும் புணரத்துவம் செய்யும் ஓர் அற்புதக் காரணியாக தீபஒளி திருநாள் விளங்குகிறது. தீபாவளி என்றால் மத்தாப்புபோல் அகமும், புறமும் மலர்வதை நன்கு உணரலாம்.


இப்புவியில் மலர்ந்த உயிர்கள் அனைத்தும் இறையின் அம்சமே. இறையின் எல்லா பண்புகளையும் தங்களது இயல்பாக கொண்டவர்கள் நீங்கள். இறையின் அம்சமாக கடமையாற்ற இப்புவிக்கு வந்தவர்கள் நீங்கள். உங்களின் இயல்பு நிலையில் இருந்து நீங்கள் செயல்பட்டால் உங்களை வெல்பவர்கள் உலகில் எவருமில்லை.


உலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வல்லவர்களாக வேண்டும். உலகில் நிறைய வல்லவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் நல்லவர்களாக வேண்டும். நரகாசுரன் வல்லவனாக இருந்தான்; ஆனால் நல்லவனாக இல்லை. அதனால்தான் இந்த வதம் ஏற்பட்டது. புராணங்களில் உணர்த்தும் உண்மை வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது நல்லவர்களாக இருக்க வேண்டும். அவர்களால் சமுதாயத்திற்கும் மக்களுக்கும் நன்மையே நடக்க வேண்டும் என்பதே புராணங்கள் உணர்த்தும் உண்மை. இந்நிலையில் நீங்கள் யார்என்று உணர்ந்து உங்களுள் உள்ள தேவையில்லாதவற்றை நீக்கி தீபஒளி திருநாளில் தூய்மையானவர்களாக, உண்மையானவர்களாக, நல்லவர்களாக, வல்லவர்களாக பிரகாசிக்க பரிபூரண நல்லாசிகள்.


நான் பிறந்த இந்த புவிக்கு, எனக்கு அடைக்கலம் அளித்து ஆதரவளித்த புவிக்கு, இன்றும் என்னையும், என் குடும்பத்தையும் , என் சமுதாயத்தையும், என் தேசத்தையும், என் உலகத்தையும் அன்போடும், கருணையோடும் எல்லா வளத்தோடும் எல்லா நலத்தோடும் காத்துக் கொண்டிருக்கின்ற புவித்தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை உணர்ந்து செய்யும் கடமை வீரராக திகழ்ந்து நீங்கள் உங்கள் கடமைகளில் என்றும் சிறந்து தீபங்களைப் போல் சுடர்விட்டு பிரகாசிக்க பரிபூரண நல்லாசிகள்.


கருவிலே பல்லாயிரம் அணுக்களோடு போராடி வெற்றி பெற்று தாயின் கருவறைக்குள் புகுந்து வெற்றியாளராக இப்புவிக்கு வந்த வெற்றியாளர்கள் நீங்கள். பிறக்கும்போதே வெற்றியுடன் பிறந்த உங்களுக்கு தோல்வி என்பதே இல்லை. இடையில் நீங்கள் சந்திப்பவை எல்லாம் உங்களை வாழ்வில் என்றும் உயர்த்தும் படிக்கட்டுகள் என்பதை உணர வைப்பதற்காகவே, உணர்த்துவதற்காகவே ஏற்பட்டது; ஏற்படுத்தப்பட்டது. எனவே வாழ்வின் எல்லா நிலைகளிலும் உணர்ந்தவர்களாக மத்தாப்புபோல் மலர்ந்த வாழ்வை வாழ பரிபூரண நல்லாசிகள்.


உங்களின் முகத்தில் தோன்றும் புன்னகை, உங்களின் இதயத்தில் உரையும் கனிவு, உங்களின் சொற்களில் வெளிப்படும் மென்மை, உங்களின் செயல்களில் காணப்படும், உணரப்படும் அக்கறை இவையே உங்களின் உண்மையான இயல்பு. உங்களின் இயல்பு நிலைகளில் நீங்கள் என்றென்றும் நிலையாய் நின்று நீடித்து சிறக்க பரிபூரண நல்லாசிகள்.


தனி மனித சமூகத்தின் நல்வாழ்வை முன்னிட்டு மிகுந்த நல்வழிப்பாதையாக பண்டிகைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளனர் .மனித நேயத்தை தன் வாழ்வில் நெறியாக கடைபிடித்து வாழும் வகையில் பண்டிகைகளை நம் முன்னோர்கள் வடிவமைத்துள்ளனர். நன்மையின் வெற்றி தீமையின் அழிவு என்பதை நரகாசுரனின் வீழ்ச்சியின் மூலம் உலகிற்கு கிருஷ்ண பரமாத்மா உணர்த்தியுள்ளார்கள்.


எங்கும் ஒளிமயமாக எங்கும் ஒளிவெள்ளமாக மலரும் தீபஒளி திருநாளின் மூலம் தேவையில்லாதவைகள் நீங்குவதால் மனதில் இருள் அகன்று, ஒளி நிறைந்து புறத்தைப் போலவே அகமும் ஒளிபிம்பமாக காட்சியளிக்கும். நன்றி உணர்வே மனிதகுலத்தின் இன்றியமையாத பண்பாகும். மனித குலத்தின் இலக்கணமான நன்றி உணர்வுடன் நீங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் செயல்பட்டு, நீங்கள் மட்டுமல்லாமல் உலகஉயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழும்வகையில் உங்களின் கடமைகள் என்றென்றும் அமைய இந்த தீபஒளி திருநாளில் எல்லா நலங்களும் எல்லாம் வளங்களும் பெற்று என்றும் நிறையவுடன் மகிழ்வுடன் நிறைவாழ்வு வாழ தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் சந்தோசம்! சந்தோசம் !சந்தோசம் !.
Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஸ்ரீ காருண்ய மகாகணபதி திருக்கோவிலில் ஏகாதேசி பஜனை

ஸ்ரீ காருண்ய மகாகணபதி திருக்கோவிலில் ஏகாதேசி பஜனை ...

ராம் மந்திர் வளாகத்தில் ஆராதனை

ராம் மந்திர் வளாகத்தில் ஆராதனை...

தில்லி காஞ்சி கலாசார மையத்தில் தியாகராசர் ஆராதனை

தில்லி காஞ்சி கலாசார மையத்தில் தியாகராசர் ஆராதனை...

துவாரகா ராம் மந்திரில் ராதா கல்யாண மகோத்சவம்

துவாரகா ராம் மந்திரில் ராதா கல்யாண மகோத்சவம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us