கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. தலைநகரில் முருகன் குடிகொண்டுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஹோமங்கள் வள்ளி கல்யாணம் காவடி திருப்புகழ் வழிபாடு என ஆறு நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.
நொய்டாவின் செக்டார் 62ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயிலில், நொய்டா வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் ஆறு நாட்களும் கந்த சஷ்டியை விமரிசையாக கொண்டாடினார்கள். ஆறு நாட்களும், காலையில் மூலவர் ஸ்ரீ கார்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகம் , கார்த்திகேய லட்சார்ச்சனை' மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஹோமம், காவடி மற்றும் பால்குடம் நடைபெற்றது
விழாவின் நிகழ்வாக கர்நாடக இசை கச்சேரியை ராமகிருஷ்ணாபுரம் சவுத் இந்தியன் சொசைட்டி. மற்றும் வேதிக் பிரசார் சன்ஸ்தான் இணைந்து கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். ராமகிருஷ்ணாபுரம் சங்கத் தலைவர் ஆர்.கே.வாசன் வரவேற்க, துணை தலைவர் கிருஷ்ணசாமி கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீராக் ஸ்ரீ ஹரி சகோதரர்கள் விறுவிறுப்பான சுத்த தன்யாசி வர்ணத்தில் இசைமாலையை ஆரம்பித்தார்கள். சூரனை வெல்ல வேல் கொடுத்த அந்த தயாபரியை, கெளரியை, நாராயணியை, அம்பிகையை முத்தையா பாகவதர் வரிகளில் 'ஸ்ரீ ராஜ மாதங்கியை' சபைக்கு அழைத்து அரியணையில் எழுந்தருள வைத்துக்கொண்டு அடுத்து ஓம்கார ஸ்வரூபனை லம்போதரனை தீட்சிதரின் வரிகளில் பஞ்சமா தங்க முக கணபதி கிருதியில் அந்த சுமுகனை வலம் வந்து வணங்கி .. மீண்டும் தேவியின் பாதம் பணிய எடுத்துக் கொண்டது ஸ்வாதியின் ஆரபிராகம். மிக பலமான அஸ்திவாரம் அமைத்துக்கொண்டு சிம்மவாகினியை திருவனந்தபுரம் காத்து ரட்சிக்க வேண்டிக்கொண்டு மீண்டும் தீட்சிதரின் வரிகளில் பசுபதி நாதனை காஷ்மீர வாசனை பன்னகாபரணபூஷணை.... பரசிவ தத்வ போதிதானந்தம் என்ற இடத்தில் நிரவல் ஸ்வரம் பாடி நம்மை ரசிக்க வைத்து சுபபந்துவராளியை அழகு படுத்தியது அருமை.இந்த கீர்த்தனையில் விக்னேஷ் வயலினும் ,அபிஷேக்கின் மிருதங்க வாசிப்பும் கீர்த்தனைக்கு உயர்வு கொடுத்தது சிறப்பு.
விறுவிறுப்பான மருகேலரா அதனை தொடர்ந்து முக்கிய கீர்த்தனைக்கு எடுத்துக் கொண்டது காம்போதி. விஸ்தாரமான ஆலாபனையுடன் ஷஷ்டி நாயகனை கார்த்திகேயனை மனஸிஜ கோடி கோடி லாவண்யாளனை தீனசரண்யனை சுரமுனிகளும் தேவர்களும் பூஜிக்கும் தாமரை பாத அழகனை பக்த ஜனகனை வாசுகி தட்சன் என் பாம்பு ரூபம் எடுப்பவனை தாரகாசுரனை , சிம்ம முகனை, சூரபத்மனை சம்கரித்தவனை, வள்ளி மணாளனை சக்தி வேல் கையில் ஏந்தியவனை வாசவாதி சகல தேவதா வந்தி தாய வரேண்யாவில் நிரவல் அமைத்து ஸ்வரம் பாடி நிறுத்தி நிதானமாக முருகனை கண்முன் தரிசனம் செய்வித்தது அருமை.
சுவாதியின் சுருட்டி தொடர்ந்து பேகாக்கில் பாண்டுரங்கனை களிப்புடன் ரசிக்க வைத்து இறுதியில் மகாராஜபுரம் தில்லானாவுடன் நிறைவு செய்தார்கள். இந்த இசைமாலைக்கு வயலினின் விக்னேஷூம் மிருதங்கத்தில் அபிஷேக்கும் இணை சேர்ந்து சிறப்பித்தார்கள் தலைநகர் பாகவத பிதாமகர் சுப்புராம பாகவதர், கலைஞர்களை கௌரவித்தார். விங் கமாண்டர் (ஓய்வு) சந்திரசேகர் அவர்கள் சுப்புராம பாகவதரை கெளரவித்தார். மீனா வெங்கி கச்சேரி முடிவில் விமரிசித்து பேசினார். . ரேணுகா ராமசேஷன, பிரியா ராஜு இருவரும் மீனா வெங்கியை கெவரவித்தனர்.
வெங்கடேஷ் நன்றி கூறினார்.இதில் இசை ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டது விழா அமைப்பாளர்களுக்கு மனநிறைவை தந்தது.
- டில்லி தினமலர் செய்தியாளர் மீனா வெங்கி
தெலுங்கானா தமிழ்ச் சங்க ஆண்டு விழா; பொங்கல் விழா...
பிப்., 4 ல் ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் முதலாம் தமிழ்ச் சங்கமம்...
நொய்டாவில் இலவச கண் மற்றும் சுகாதார பரிசோதனை முகாம்...
சென்னை, குரோம்பேட்டை கலவை குருபரம்பரை வேத வித்யா டிரஸ்ட்டில் நாம சங்கீர்த்தன பஜனை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.