தலைநகரில் மயூர்விகார் (பகுதி 2 ) காருண்ய மகா கணபதி கோவிலில் கந்த ஷஷ்டி விழா விமரிசையாக நடைபெற்றது. ஆறு நாட்கள் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஹோமங்கள் என் முருகனுக்கு விழா எடுத்து,ஷஷ்டி மறுதினம் திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவு செய்தார்கள். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் முருகன் வள்ளி தேவசேனாவுடன் ஊஞ்சலில் அழகுற வீற்றிருந்தார்.
அருகில் உள்ள சிவன் கோவிலில் இருந்து முருகன் படத்தை சந்திரசேகர் ஏந்தியிருக்க மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசைகளுடன் நாதஸ்வரம் முழங்க ஊர்வலமாக வந்தனர். காருண்ய கணபதி , பெற்றோர் வைத்தீஸ்வரன், பாலாம்பிகை, மாமன் லட்சுமி நரசிம்மரை முதல் தளத்தில் வலம் வந்து பின்னர் மணமேடைக்கு வந்து சேர்ந்தார்கள். சம்பிரதாய ஊஞ்சல், மாலை மாற்றுதல், பால் பழம் கொடுத்தல் பின்னர் பச்சை பிடி சுற்றி திருஷ்டி கழித்தனர். வேதமந்திரம் முழங்க அக்னிசாட்சியிருக்க கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
இடையில் நாதஸ்வரம் திருப்புகழ் பஜனை பாடல்கள் பாடி நிகழ்வை மங்களகரமாக நடத்தினார்கள். கோவில் குருக்கள் சீனிவாசன் , உமாபதி, ஈஸ்வரன், மற்றும் மணிகண்டன் ஆகியோர் வைதீக முறையில் உற்சவத்தை கொண்டு சென்றார்கள்.கோவில் நிர்வாகம் இந்த வைபவத்தை மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.பக்தர்கள் பரவசத்துடனும் மகிழ்வுடனும் பங்கேற்றது காண ரம்யமாக இருந்தது.
- தினமலர் டில்லி செய்தியாளர் மீனா வெங்கி
தெலுங்கானா தமிழ்ச் சங்க ஆண்டு விழா; பொங்கல் விழா...
பிப்., 4 ல் ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் முதலாம் தமிழ்ச் சங்கமம்...
நொய்டாவில் இலவச கண் மற்றும் சுகாதார பரிசோதனை முகாம்...
சென்னை, குரோம்பேட்டை கலவை குருபரம்பரை வேத வித்யா டிரஸ்ட்டில் நாம சங்கீர்த்தன பஜனை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.