ஐதராபாத் வாழ் தமிழர்களின் நலன் கருதி சென்னை வரை இயங்கும் சார்மினார் இரயிலை திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ரயில்வே துறைக்கு பரிந்துரைத்துள்ளார்.
தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தெலுங்கானா மாநில மேதகு ஆளுநர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஐதராபாத் வாசிகளின் நலன் கருதி சென்னை-ஐதராபாத் இடையே இயங்கும் சார்மினார் ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும். தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான நம் தமிழ் உறவுகளின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை - ஐதராபாத் இடையே இயங்கும் சார்மினார் ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சார்மினார் விரைவு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.
தென் மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா தலைநகரான ஐதராபாத்துக்கு நேரடி தினசரி ரயில் இல்லை. திருநெல்வேலி, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புக்காக ஐதராபாத்துக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தற்போது சென்னை சென்று அங்கிருந்து மாலையில் புறப்படும் ரயிலில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பகல் முழுவதும் பயணிகளின் நேரம் வீணாகிறது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, மங்களூரு, கோவைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டாலும், ஐதராபாத்துக்கு மட்டும் வாராந்திர ரயில் சேவை தான் தற்போதுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவிற்கு 2014 முதல் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என மாவட்ட ரயில்கள் பயணிகள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஐதராபாத்தில் மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:55 மணிக்கு தாம்பரம் வரும்.
அங்கிருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு இரவு 8:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். மறுமார்க்கத்தில் அங்கிருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு மாலை மாலை 6:00 மணிக்கு தாம்பரம் செல்லும். அங்கிருந்து மாலை 6:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:50 மணிக்கு ஐதராபாத் செல்லும் வகையில் கால அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே, இந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் தக்க பரிசீலனை செய்து சார்மினார் ரயிலை கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும். - எம்.கே. போஸ், தலைவர்; தெலுங்கானா தமிழ்ச் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்
ஸ்ரீ காருண்ய மகாகணபதி திருக்கோவிலில் ஏகாதேசி பஜனை ...
தில்லி காஞ்சி கலாசார மையத்தில் தியாகராசர் ஆராதனை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.