தலைநகர் தில்லி லோகி ரோட்டில் அமைந்துள்ள ரமண கேந்திராவில் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.ஜெயந்தி அய்யர் இசை குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி ரமண கேந்திரா வில் பக்தி இசைநிகழ்வை நடத்தினார்கள்.
சமகாலத்தில் வாழ்ந்து வழிகாட்டிய மகான்கள் பலரும் பகவான் ஶ்ரீ ரமண மகரிஷியும் போற்றுதலுக்குரியவர்கள்.
மதுரை மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர் ரமண மகரிஷி. மிக இளம் வயதிலேயே பக்தி நிலையை அடைந்தவர். வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட அவர், தன் இறுதி நாட்கள் வரை அங்கேயே வாழ்ந்தார்.
அவரது பக்தர்கள் அவரது வழிகாட்டுதலை எழுத்து வடிவில் பாட்டுக்களாக, கட்டுரைகளாக எழுதி வருவதை பார்க்கிறோம்.அந்த வகையில் பாக்யலெட்சுமி சூரிய நந்தன் பக்தி கீதங்கள் பல எழுதியுள்ளார்.அவற்றைஇசை படுத்தி பலருக்கும் சொல்லிக்கொடுத்து வருகிறார் தில்லி ஜெயந்தி அய்யர் ..C.S.K அண்ணாதுரை வயலின் வாசிக்க. ஜெயந்தி அய்யர் உடன் ஜலஜா சங்கர், கிரிஜா ராமநாதன், விஜி சந்திரசேகர் இணைந்து அளித்த இசை விருந்து பக்தியுடன் இன்பமாக உள்ளம் நிறைத்தது.
- தினமலர் டில்லி செய்தியாளர் மீனா வெங்கி
தெலுங்கானா தமிழ்ச் சங்க ஆண்டு விழா; பொங்கல் விழா...
பிப்., 4 ல் ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் முதலாம் தமிழ்ச் சங்கமம்...
நொய்டாவில் இலவச கண் மற்றும் சுகாதார பரிசோதனை முகாம்...
சென்னை, குரோம்பேட்டை கலவை குருபரம்பரை வேத வித்யா டிரஸ்ட்டில் நாம சங்கீர்த்தன பஜனை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.