தில்லி லோக் கலா மஞ்ச் நிறுவனரும் சமூக ஆர்வலருமான மறைந்த ராமசாமியின் 9 ஆவது நினைவு கச்சேரியும் விருது வழங்கு நிகழ்வும் வாசுகி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காயத்ரி நுண்கலை அமைப்புடன் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.சம்பிரதாய குத்து விளக்கேற்றிய பின் மீனா வெங்கி வரவேற்புரை வழங்க தில்லி கலைஞர் ஆர் ஸ்ரீ தர் வயலினிசை நடைபெற்றது. அவருடன் தலைநகர் மூத்த கலைஞர் கும்பகோணம் பத்மநாபன் மிருதங்கம் , பேஜங்கி ரவிகிரண் மோர்சிங் வாசித்தனர்.
எப்படி பிச்சி, முல்லை , ரோஜா என் பல மலர்கள் சேர்த்து அழகிய மாலை உருவாக்குவது போல அசாவேரி, ஜெயந்தஸ்ரீ, தன்யாசி, கார்டா, கருடத்வனி,கனககுதூகலம், ஆபேரியில் ராமனை தியாகராசர் எப்படியெல்லாம் அழைத்து மகிழ்ந்தாரோ அதை நம்மையும் அனுபவிக்க வைத்து தாச கிருதி காபியிலும் ராம ரசத்தை ஜகதோ தாரணவில் ரசிக்க வைத்தது அருமை.பாபநாசம் வரிகளில் மானிடரை பொம்மை ஆக்கி இறைவன் விளையாடும் 'நான் ஒரு விளையாட்டு பொம்மை யா',நவரசகானடாவில் சபையோரை தாளமிட வைத்தது.
முக்கிய கீர்த்தனையாக ஆபேரியில் 'நகு மோமு கலலேனி' சரணத்தில் எப்படி விஷ்ணு பகவான் வாகனம் கருடன் அவர் உளமறிந்து வேகமாக பறந்து அவரை பக்தரிடம் கொண்டு சேர்க்குமோஅதுபோல அர்த்தம் கொண்ட ' இக் ராஜு வில் நிரவல் ஸ்வரம் அமைத்து விறுவிறுப்பான மிருதங்க மோர்சிங் கூட்டணியில் ரசிகர்களுக்கு நல்ல இசை விருந்து கிடைத்தது.
அன்றைய நிகழ்வில் வயலின் வித்தகர் தில்லி ஆர். ஸ்ரீதர் அவருக்கு ராமசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் ஹேமா ராமசாமியும், லட்சுமி சம்பத்தும் பட்டயம் வழங்கி கெளரவித்தார்கள். மற்ற கலைஞர்களையும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள். காயத்திரி சார்பில் கோவிந்தனும், தாளபக்தி சார்பில் பத்மநாபனும் ஸ்ரீதரை கெளரவித்தனர். இருஅமைப்புகள் சார்பில் மீனா வெங்கி நன்றி கூற இசை நிகழ்ச்சி இனிது நிறைவுபெற்றது.
- தினமலர் தில்லி செய்தியாளர் மீனா வெங்கி
தெலுங்கானா தமிழ்ச் சங்க ஆண்டு விழா; பொங்கல் விழா...
பிப்., 4 ல் ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் முதலாம் தமிழ்ச் சங்கமம்...
நொய்டாவில் இலவச கண் மற்றும் சுகாதார பரிசோதனை முகாம்...
சென்னை, குரோம்பேட்டை கலவை குருபரம்பரை வேத வித்யா டிரஸ்ட்டில் நாம சங்கீர்த்தன பஜனை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.