தில்லியில் சண்முகா நந்தசபா லோதி ரோட் லோக் கலாமஞ்சில் உள்ள வாசுகி அரங்கில் நடத்திய இசை நிகழ்ச்சியில் சென்னைஸ்ரீ ரஞ்சனி சந்தானகோபாலன் குழுவினரது கச்சேரி நடைபெற்றது. பாரம்பரிய குத்து விளக்கேற்றிய பின் செயலர் கிருஷ்ணசாமியின் வரவேற்புரையுடன் இசைமாலை தொடங்கியது. சபாவின் துணைத்தலைவர் சி.எஸ்.வைத்தியநாதன் ( வழக்குரைஞர்) சிறப்பு சொற்பொழிவாற்றி கலைஞர்களை கெளரவித்தார்.சென்னை சாய் ரக்க்ஷித் வயலின் , விஜய் நடேசன் மிருதங்கம் வாசித்தார்கள். விறுவிறுப்பான சுப்ரமணியனின் ஹமீர்கல்யாணி வர்ணத்தில் மால்மருகனை, முருகனை, குகை மந்தகாசனை, ஷண்முகனை ' செந்தில் வாழ் முருகையாவில் அடிபணிந்து அடுத்து திருமயிலை வாழ் சிற்பர கபாலியை ' கற்பக மனோகரா' என் பாபநாசம் சிவன் வரிகளில் விளித்து அதே இடத்தில் ஸ்வரம் பாடி வயலின் மிருதங்க துணையோடு ஈஸ்வரனுக்கு நாதாபிஷேகம் செய்வித்தார்.
அடுத்து ஆகம சம்பிரதாய நிபுணஸ்ரீ விமலே சியாமளே, நிர்மலமானவளை , லம்போதரனும் குருகுகனும் பூஜிக்கும் வாக்தேவதே என பலவாறாக வந்தனம் சொல்லி அந்த தேவியை திருவானைக்காவல் தயாபரியை த்வஜாவந்தியில் நிதானமாய் பாடி அவளை கண்குளிர தீட்சிதரின் வரிகளில் ரசிக்க வைத்து ரம்யமான ரீதி கெளைக்கு அமோகமான அஸ்திவார ஆலாபனையுடன் நம்மை காத்து ரட்சிக்க திரிலோக ரட்சகியை திக்கெவரம்மா என்று அன்னையிடம் இறைஞ்சி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நிஜமர்மமுலனு தெலிசவாரினி பாடி அதில் ஸ்ருதி காயத்ரி புராணியில் ஸ்வரம் அமைத்து அழகுபடுத்திக் கொண்டு ஆடும் மணிவேல் அணிசேவலென என்று கந்தர் அனுபூதியில் விருத்தம் பாடி அந்த உமாபதி சுகுமாரனை வரகுண நிதியை எல்லாம் நீதானப்பா வேறு எவருமில்லை ..பேதை என்னிடம் விளையாட வேண்டாம் என சலநாட்டையில் ராக முத்திரையுடன் அவன் தாள் கதியென கோடீஸ்வர அய்யரின் நம்மை மீண்டும் முருகனிடம் தஞ்சம் அடையவைத்தார்.
நம்மை கச்சேரியின் முக்கிய கீர்த்தனைக்கு இட்டுச் சென்றார். தோடியில் துய்ய துய்ய நனைய வைத்தார். ஸ்ரீ கிருஷ்ண பஜமானச சததம்..ஸ்ரித ஜன பரிபாலம் கோபாலம்.. அருமை.சங்கு சக்ரதாரியை அதே இடத்தில் நிரவல் ஸ்வரம் பாடி அந்த வேணு கான லோலனை இழைத்து இசைத்து அனுபவிக்க வைத்தார்.சாய் ரக்க்ஷித்தும் , விஜய் நடேசனும் வயலினிலும் மிருதங்கத்திலும் துணைவர தோடி ரசிகர்களுக்கு கிடைத்த பெரிய விருந்து.
அடுத்தாற்போல் 'ஆஜாயோ ஷ்யாமோ மோகனா' ஸ்வாதியின் கிருஷ்ண பஜன், நீமாட்டலே மாயெனுரா .. பட்டாபிராமய்யாவின் பூர்வி கல்யாணியில் பாடி நிறைவு செய்தார். மீனா வெங்கி சங்கீத மாலையை விமர்சனம் செய்ய சபா செயலர் கிருஷ்ணஸ்வாமி நன்றி கூறினார்.
- தினமலர் தில்லி செய்தியாளர் மீனா வெங்கி
தெலுங்கானா தமிழ்ச் சங்க ஆண்டு விழா; பொங்கல் விழா...
பிப்., 4 ல் ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் முதலாம் தமிழ்ச் சங்கமம்...
நொய்டாவில் இலவச கண் மற்றும் சுகாதார பரிசோதனை முகாம்...
சென்னை, குரோம்பேட்டை கலவை குருபரம்பரை வேத வித்யா டிரஸ்ட்டில் நாம சங்கீர்த்தன பஜனை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.