காஞ்சி மஹா பெரியவரின் அனுஷ ஜெயந்தியை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் குரோம்பேட்டை கலவை குருபரம்பரை வேத வித்யா டிரஸ்ட் நாம சங்கீர்த்தன பஜனை நடத்தி வருகின்றனர்.18 ஜனவரி 2023 அனுஷ ஜெயந்தியை முன்னிட்டு, கானஸ்மிருதி பஜன் மண்டலியின் நாம சங்கீர்த்தனம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி மிக சிறப்பாக நடைபெற்றது.
(வாய்ப்பாட்டு) கே. கிரிஜா, நீலா கிருஷ்ணா, கே. சிவகுமார். நந்தினி சிவகுமார், பூர்ணிமா, பாலசுப்பிரமணியம் (ஹார்மோனியம்) ஏ. தருன், (மிருதங்கம்) ஸ்ரீராகவன் மற்றும் (டோல்கி) சஞ்சீவ் இதில் பங்கேற்றனர்.
கலவை டிரஸ்டில் பயிலும் வித்தியாதிரிகள் இதில் பங்கேற்று மிக பரவசமுடன் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
செந்தமிழ் பேரவை சார்பில் ஆண்கள் இரட்டையர் பூபந்து போட்டிகள்...
நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.