செய்திகள்

துவாரகா ராம் மந்திரில் ராதா கல்யாண மகோத்சவம்

ஜனவரி 29,2023 

துவாரகா ராம் மந்திரில் ராதா கல்யாண மகோத்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. தில்லி ராமகிருஷ்ண பாகவதர் சுனில் பாகவதர் நடத்தி வைத்தார்கள்.சம்பிரதாய உஞ்சவர்த்தியில் தொடங்கி பிரதட்சணம், பஜனைகள் தொடர்ந்து கல்யாண வைபவம் நடைபெற்றது. ஜோடனையுடன் அலங்கரிக்கபட்ட மண்டபத்தில் ராதையும் கிருஷ்ணரும் சித்ர ரூபத்தில் அமர்ந்திருந்தார்கள்.சீர் வரிசைகள் சூழ கிருஷ்ணர் சபைக்கு வந்தார்.பஜனை பந்ததியில் வைபவங்கள் நடந்தது.கோலாட்டம் கும்மி என அவன் கல்யாணத்தில் நாம் ஆனந்தித்தோம்.

ராதா கல்யாணம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையும் வைபவம் ஆகும். இந்த தத்துவத்தை, சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், நம் முன்னோர்கள் இந்த வழி முறையை இயற்றி இருப்பது, நம்முடைய பாரம்பரிய சொத்து. கல்யாண உற்சவம் என்பது இறைவனுக்கே திருமஞ்சனம் செய்வதில் மகிழ்ச்சி அடையும் ஒரு சிறப்புச் சடங்கு. தெய்வீக தம்பதிகளின் சங்கமம் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் குறியீட்டு சங்கமாக கல்யாண உற்சவத்தை எடுத்துக்கொள்ளலாம்.
கல்யாண உற்சவம் செய்யும் போது, ​​அவருடைய பெற்றோராக இருப்பதில் அளவற்ற இன்பம் கிடைக்கும் என்பது பகவானின் சௌலப்யம்! நாம் இறைவனுக்குக் கல்யாண உற்சவம் நடத்தும்போது, ​​அவர் நம் மகனாகப் பாத்திரத்தை அனுபவிக்கிறார்!
கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி உணர்வில் இறையாண்மையை உணர்ந்தார்கள்.கோவில் சார்பில் பாகவதர்கள் கெளரவிக்கப்பட்டனர்.கல்யாண போஜனம் அனைவரையும் மகிழ்வித்தது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்ற மகளிர் தின கொண்டாட்டம்

ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்ற மகளிர் தின கொண்டாட்டம்...

நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்

நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்...

மார்ச் 11, 12 ல் மகளிர் தினவிழாப் போட்டிகள்- 2023

மார்ச் 11, 12 ல் மகளிர் தினவிழாப் போட்டிகள்- 2023...

நொய்டாவில் திருவையாறு

நொய்டாவில் திருவையாறு...

Advertisement
Advertisement

Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us