சற்குரு தியாகராஜ சுவாமிகளின் 176 வது ஆராதனை தலைநகர் காஞ்சி கலாசார மையத்தில் கொண்டாடப்பட்டது. சங்கீத கலைஞர்கள் பலரும் கூடி பஞ்சரத்னகீர்த்தனைகள் பாடி குரு அஞ்சலி செலுத்தினார்கள்.விதூஷி விஜயஸ்ரீ சுப்பிரமணியம், ஜெயந்தி அய்யர், எம் ஆர் ராமசாமி, வழிகாட்டலில் மற்ற இசை பிரியர்கள் இணைந்து பாடினார்கள். வயலினில் , தில்லி ஆர் ஸ்ரீதர் அவரது மாணவர்கள் ஏ.ஜி.சுப்ரமணியம்,ராதிகா ஸ்ரீ காந்த் மிருதங்கத்தில் கும்பகோணம் பத்மநாபன் மற்றும் அவரது மாணவர்கள் சங்கரராமன் , விக்னேஷ் உடன் வாசித்து சிறப்பித்தனர்.
காஞ்சி மையத்தில் சார்பில் சிவசங்கரன் அவர்களின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது . ஜெயகுமார் கலைஞர்களை கெளரவித்தார்கள்.மீனா வெங்கி தியாகராஜர் சுவாமிகளை பற்றியும் பஞ்சரத்ன கிருதிகளின் சாராம்சத்தை எடுத்துச் சொன்னார்கள்.அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியளர் மீனா வெங்கி
ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்ற மகளிர் தின கொண்டாட்டம்...
நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்...
மார்ச் 11, 12 ல் மகளிர் தினவிழாப் போட்டிகள்- 2023...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.