ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் முதலாம் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, பிப்ரவரி 4, 2023 அன்று சரியாக மாலை 4 மணிக்கு, மங்கல விளக்கேற்றல் மற்றும் தமிழ் வகுப்புக் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கி, வரவேற்புரை, உறுப்பினர் அறிமுகம், சிறப்பு விருந்தினர் உரை, புத்தக வெளியீட்டு விழா, பரதநாட்டியம், வாழ்த்துப் பாடல்கள், சிறு புத்தக கண்காட்சி என்று அறிவுக்கும், மனதுக்கும் விருந்தூட்டும் வகையில் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவில்,
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். ந குறள் எண் – 412
என்ற குறளுக்கேற்ப, ஐக்கிய தமிழ் மன்ற குடும்பத்தினர் அனைவருக்கும், தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி, அறுசுவை இரவு உணவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அனுமதி இலவசம், தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
அழைப்பின் மகிழ்வில்,
ஐக்கிய தமிழ் மன்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.
- தினமலர் வாசகர் எம்.யுவராஜ்
செந்தமிழ் பேரவை சார்பில் ஆண்கள் இரட்டையர் பூபந்து போட்டிகள்...
நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.