தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா (ஆண்டு விழா பொங்கல் விழா தமிழர் கலை விழா) ஜனவரி 29ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஐதராபாத்தில் பாக்லிங்கம்பள்ளி உள்ள சுந்தரய்யா விஞ்ஞான கேந்திர அரங்கில் மிகுந்த எழுச்சியுடன் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறன் மற்றும் பல்வேறு திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் விழா மிகவும் எழுச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில் புதுப்பானையில் சர்க்கரை பொங்கலிடல் மற்றும் சிறுவர் முதல் பெரியவர் வரை வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் ஏராளமான பரிசுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர். பின்னர் தமிழர் கலை விழா மற்றும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் கலந்து கொண்டு ஆடல் பாடல் இசை மீட்டல் என தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தனர்,
அனைவருக்கும் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தமிழ்ச் சான்றோர்கள் படத்துடன் கூடிய நாட்காட்டி விலையில்லாமல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு அரசு துறையினர் வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இரவு அறுசுவை சிற்றுண்டியுடன் இனிப்பான சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மிகச் சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார் அருணா குமாரராஜன். நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை தலைவர் போஸ் தலைமையிலான நிர்வாகிகள் துணைத் தலைவர் தருமசீலன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் நேரு, துணைப் பொருளாளர் குமாரராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வாசன், ராஜன்முத்துசுவாமி, உமாகணேசன், துரைசாமி, செல்வகுமரன் மற்றும் பிரபு, தட்சிணாமூர்த்தி, வேல்முருகன், சாந்தகுமார், மீனாட்சிசுந்தரம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் செய்திருந்தனர்.
செந்தமிழ் பேரவை சார்பில் ஆண்கள் இரட்டையர் பூபந்து போட்டிகள்...
நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.